"செக்யூரிட்டி கோட்.." மொபைல் போனுக்கு நோ அனுமதி.. நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தில் கெடுபிடி

சென்னை : நயன்தாரா- விக்னேஷ் சிவனின் திருமணத்தில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. என்ன இத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள் என வந்திருக்கும் விருந்தினர்களே கொஞ்சம் குழம்பிப் போய் உள்ளனராம்.

நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் நாளை மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் ரிசார்ட்டில் நடைபெற உள்ளது. இந்த திருமண நிகழ்வை பிரபல டைரக்டர் கெளதம் மேனன் இயக்க உள்ளார். திருமணத்திற்கான ஏற்பாடுகள் மிக பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.

விக்னேஷ் சிவன் சொன்ன தகவல்

விக்னேஷ் சிவன் சொன்ன தகவல்

திருமண போட்டோக்கள் ஜுன் 9ம் தேதி பிற்பகலுக்கு பிறகு தனது சோஷியல் மீடியா பக்கங்களில் பகிரப்படும் என விக்னேஷ் சிவன் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது கூறினார். அதோடு, திருமணம் இந்து முறைப்படி தான் நடைபெற உள்ளதாகவும், விஐபி.,க்களை அழைத்து செல்வது, தங்க வைப்பது போன்றவற்றில் இருந்த நடைமுறை சிக்கல் காரணமாகவே திருமணத்தை திருப்பதியில் நடத்த முடியாமல் போனது என்றும் கூறினார்.

Recommended Video

Nayan-Wikki திருமணம் , புதிய Update கொடுத்த Vignesh Shivan *Celebrity |Filmibeat Tamil
ரஜினி, கமல் வருவாங்களா

ரஜினி, கமல் வருவாங்களா

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்பு செய்ய பல ஓடிடி தளங்கள் போட்டி போட்ட நிலையில், கடைசியாக பெரிய தொகைக்கு திருமண ஒளிபரப்பு உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் தளம் வாங்கி உள்ளது. நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, சூர்யா, அஜித், கார்த்தி, விஜய் சேதுபது உள்ளிட்ட பல திரைப்பிரலங்கள் பங்கேற் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமண கொண்டாட்டம் துவங்கியது

திருமண கொண்டாட்டம் துவங்கியது

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண கொண்டாட்டங்கள் நேற்று இரவு மெஹந்தி சங்கீத் நிகழ்ச்சியுடன் துவங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் 100 க்கும் அதிகமான விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளனர். திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் விதவிதமாக போட்டோக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளதாம். இந்த போட்டோக்கள் வெளியாகி செம டிரெண்டாகி உள்ளன.

இத்தனை கட்டுப்பாடுகளா

இத்தனை கட்டுப்பாடுகளா

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, திருமணத்தில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாம். குறிப்பாக திருமணத்திற்கு வருபவர்கள் கண்டிப்பாக மொபைல் போன்கள் கொண்டு வர கூடாதாம். போட்டோக்களும் எடுக்கக் கூடாது என கூறப்பட்டுள்ளதாம். திருமண நிகழ்வுகளை படமாக்கும் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளதால் திருமணம் தொடர்பான வீடியோவோ, போட்டோவோ வெளியில் எதுவும் கசிந்து விடக்கூடாது என்பதற்காக தான் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதா கூறப்படுகிறது.

இதுவேற இருக்கா

இதுவேற இருக்கா

அதுமட்டுமல்ல, ‘Security Code' அழைப்பிதழுடன் வழங்கப்படும் என்றும், வெரிஃபிகேசனுக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று புதிய செய்தி வெளியாகியுள்ளது. மேலும், இதில் பங்கேற் அனைவரும் அணிந்த வர வேண்டிய உடை குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X