twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வருத்தம் தெரிவித்த ஆஸ்கர் ஒலிப்பதிவாளர்!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : 2017-ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரட்டை தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதை செழியனின் 'டூ லெட்' திரைப்படம் பெற்றது.

    விருதாளர்களுக்கு நேற்று விருது வழங்கும் விழா நடைபெற்றது. சிலருக்கு மட்டுமே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருது வழங்குவார் என்றும், மற்றவர்களுக்கு ஸ்மிருதி இராணி விருது வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டதால் பலர் விழாவைப் புறக்கணித்தனர்.

    Resul pookkutty disappoints with Rahman

    குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்ற பிறகு ஒவ்வொரு விழாவிலும் ஒரு மணி நேரம் மட்டுமே கலந்துகொள்வது எனும் முடிவு எடுக்கப்பட்டதாகவும், அதன்படியே இந்த ஏற்பாடு எனவும் தெரிவிக்கப்பட்டது.

    ஏ.ஆர்.ரஹ்மானுக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கினார். விருது வழங்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்தப் புகைப்படத்தை 'குடியரசுத் தலைவருடன் தேசிய விருது பெற்ற சிலர்' எனும் கேப்ஷனோடு ட்விட்டரில் பகிர்ந்திருந்தார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

    அதில், ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி, 'சிலர் மட்டுமா? வருத்தம்' என கமென்ட் செய்துள்ளார். மலையாள நடிகர் ஃபகத் பாசில் உள்ளிட்டோர் விருது விழாவைப் புறக்கணித்த நிலையில், ரசுல் பூக்குட்டியின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Oscar Sound engineer Resul pookkutty disappoints with AR Rahman, Because Rahman did not boycott National award ceremony.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X