“எல்லாம் முடிச்சு கைல கொடுத்துட்டேன்”… 2.0 டீசர் பற்றி ரசூல் பூகுட்டி!
2.0 டீசருக்கு சவுண்ட் மிக்சிங் முடிந்துவிட்டதாக ரசூல் பூகுட்டி தெரிவித்துள்ளார்
சென்னை: ஷங்கரின் 2.0 திரைப்படத்தில் ரசூல் பூகுட்டி வேலை முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படம், சூப்பர் ஸ்டார் ஹீரோ மிகப்பெரிய பாலிவுட் நடிகர் வில்லன் என பல சிறப்பம்சங்களைக் கொண்ட படமாக ஷங்கரின் இயக்கத்தில் 2.0 திரைப்படம் தயாராகிவருகிறது.

முப்பரிமாண படமாக தயாராகிவரும் 2.0 திரைப்படத்தின் டீசர் செப்டம்பர் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசரையும் 3டி மற்றும் 2 டியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் ஆஸ்கார் நாயகனான ரசூல் பூகுட்டி இப்படத்தின் டீசருக்கான சவுண்ட் மிக்சிங் முடித்து கையில் கொடுத்துவிட்டேன், இன்னும் இரு தினங்களில் நீங்கள் தலைவர் ரஜினிகாந்தை திரையில் பார்க்கலாம் என ட்வீட் செய்துள்ளார்.
அக்ஷை குமார் முதன்முதலில் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் படம் என்பதால், பாலிவுட் ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
லைக்கா புரடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன், அக்ஷய்குமார், சுதான்சு பாண்டே, அதில் ஹுசேன், ரியாஸ் கான் மற்றும் பலர் நடித்துள்ளனர். நவம்பர் 29 ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications











