twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் விருதை வென்ற பிறகு.. பாலிவுட்டில் என்னையும் ஒதுக்கினார்கள்.. ரசூல் பூக்குட்டி பரபரப்பு!

    By
    |

    சென்னை: ஆஸ்கர் விருது வென்ற பிறகு, இந்தி படங்களில் தன்னையும் ஒதுக்கிவிட்டார்கள் என்று ரசூல் பூக்குட்டி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

    இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் சமீபத்தில் அளித்த பேட்டியில், பாலிவுட்டில் என்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது என்று கூறியிருந்தார்.

    என்னோடு கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கும்பல், தவறானச் செய்திகளைப் பரப்பி வருகிறது என்றும் கூறினார்.

    எதிராக பாலிவுட் கும்பல்.. நேரத்தை இழந்தால் ஒரு போதும் திரும்பி வராது.. ஏ.ஆர்.ரகுமான் ட்வீட்! எதிராக பாலிவுட் கும்பல்.. நேரத்தை இழந்தால் ஒரு போதும் திரும்பி வராது.. ஏ.ஆர்.ரகுமான் ட்வீட்!

    ஆதரவு குரல்

    ஆதரவு குரல்

    சுஷாந்த் சிங் மறைவுக்குப் பின் நெபோடிசம் பற்றிய விவாதம் தலைதூக்கியுள்ள நிலையில், ஏ.ஆர்.ரகுமானின் இந்தப் புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் குரல் கொடுத்தனர். பாலிவுட்டை கடுமையாகத் தாக்கினர். அவர்கள், திறமைக்கு மதிப்பளிக்கமாட்டார்கள் என்று தெரிவித்தனர். பின்னர், இதை விட்டுவிட்டு கடந்து செல்வோம் என்று ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.

    ரசூல் பூக்குட்டி

    ரசூல் பூக்குட்டி

    இந்நிலையில், ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் சிறந்த ஒலிக் கலவைக்காக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி, தன்னையும் பாலிவுட் ஒதுக்கியதாக பரபரப்பு புகார் கூறியுள்ளார். இதுபற்றி, பாலிவுட் இயக்குனர் சேகர் கபூருக்கு டேக் செய்து, தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: ஆஸ்கர் வென்ற பிறகு இந்தி சினிமா என்னை விலக்கி வைத்தது. யாரும் வாய்ப்பு தரவில்லை.

    தேவை இல்லை

    தேவை இல்லை

    இதனால் நிலைகுலைந்து விட்டேன். ஆனால், பிராந்திய மொழி படங்கள் என்னை விட்டு விடவில்லை. சில தயாரிப்பு நிறுவனங்கள் என் முகத்துக்கு நேராக, நீங்கள் தேவை இல்லை என்று கூறின. இருந்தும் நான் நமது இன்டஸ்ட்ரியை விரும்புகிறேன். அதுதான் எனக்கு கனவு காண கற்றுக் கொடுத்தது. என்னை நம்பும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு வாய்ப்பு தருகிறார்கள்.

    செல்ல மாட்டேன்

    செல்ல மாட்டேன்

    என்னால் எளிதாக ஹாலிவுட்டுக்கு சென்றிருக்க முடியும். நான் செல்லவில்லை. செல்லவும் மாட்டேன். இங்கிருந்து பணியாற்றிதான் ஆஸ்கரை வென்றேன். அமெரிக்காவில் உள்ள மோஷன் பிக்சர்ஸ் சவுண்ட் எடிட்டர்ஸ் விருதுக்கு (Motion Picture Sound Editors awards) ஆறுமுறை பரிந்துரைக்கப்பட்டு வென்றிருக்கிறேன். ஆனால் மற்றவர்களை விட எனது மக்கள் மீது, நம்பிக்கை இருக்கிறது.

    உங்களை நிராகரிப்பது

    உங்களை நிராகரிப்பது

    இதுபற்றி ஆஸ்கர் விருது உறுப்பினராக இருக்கும் நண்பர்களிடம் பேசியபோது அவர்கள், சொன்னார்கள், இது எல்லோரும் எதிர்கொள்வதுதான் என்று. இந்த உலகத்தின் உச்சிக்குச் செல்லும்போது உங்களை நிராகரிப்பது யதார்த்தம்தான் என்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார். பிறகு மற்றொரு பதிவில் யாரையும் குறை சொல்வதற்காக இதை சொல்லவில்லை என்றும் கூறியுள்ளார். இதுவும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாக மாறி இருக்கிறது.

    English summary
    After AR Rahman, sound designer Resul Pookutty has now said that he didn’t get any work in Hindi films after his Oscar win, but regional cinema held him tight.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X