கார்த்திக் சுப்பராஜின் கார் சென்டிமென்ட்.. ரஜினி முதல் சூர்யா வரை.. மாஸ் கல்ட் ஆக்சன் காட்சி

சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ரெட்ரோ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் முதல் நாள் வசூல் நிலவரமும் படக்குழுவிற்கு மகிழ்ச்சியான செய்தியை தந்திருக்கிது. நல்ல நம்பர்ஸை பெற்றிருப்பதை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனமே தெரிவித்திருக்கிறது. இந்நிலையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படங்களில் இந்த காட்சிகள் சிறப்பானதாக அமைந்திருக்கும். அதுகுறித்து இதில் காணலாம்.

பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் கார்த்திக் சுப்பராஜ். இவர் இயக்கிய முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பீட்சாவில் பேய் வந்தால் எப்படி இருக்கும் என்பதை புதுவிதமான கான்செப்டை பிடித்து அதனை காட்சிகளாக அமைத்து ரசிகர்களை கவர்ந்தவர் கார்த்திக். இப்படத்தில் நடித்த விஜய் சேதுபதி இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் உயர்ந்திருக்கிறார். அவருடன் பயணித்த நடிகர்கள் அனைவரும் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளனர். நாளைய இயக்குநர் நிகழ்ச்சி மூலம் திரையுலகிற்கு வந்து தனக்கென்று தனித்த அடையாளத்தை பிடித்திருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். பீட்சா படத்தின் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜிகர்தண்டா படத்தை இயக்கியிருந்தார்.

retro-car-scenes-featured-in-karthik-subbarajs-films

தேசிய விருது: கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 2வது படமே 2 தேசிய விருதுகளை பெற்று அனைவரது கவனமும் இவர் பக்கம் திரும்பியது. பீட்சா படத்தை காட்டிலும் ஜிகர்தண்டா படம் கார்த்திக் சுப்பராஜிற்கு மிகவும் ஸ்பெஷலான படம் என்பதை அவரே பல பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார். இப்படத்தில் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் பார்க்க புதியதாக இருந்தன. அசால்ட் சேது வரும் சீன்கள் மாஸாக கைதட்டல்களை பெற்றது. இருப்பினும் கார்த்திக் சுப்பராஜிடம் இதை கவனித்தீர்களா என்பதே பலரது கேள்வியாக இருக்கிறது. ஜிகர்தண்டா படத்தில் அசால்ட் சேதுவிற்கு ஒரு ஓபனிங் சண்டை காட்சிகள் இருக்கும். அதுவும் பழைய ரெட்ரோ காரில் இருந்து தப்பி வருவது போல் அமைத்திருப்பார். அந்த காட்சியை இப்போது பார்த்தாலும் மிரட்டலாக இருக்கும். அசால்ட் சேதுவை அவ்வளவு எளிதில் யாரும் எடை போட்டு விடாதீர்கள் என்பதை குறிப்பது போல் வைத்திருப்பார். அங்கிருந்துதான் அசால்ட் சேது யாரு? எப்படிப்பட்டவர், அரக்க குணமாக இருக்கான் என்பதை விவரிக்கும் காட்சிக்கு ஒரு சான்று அந்த காட்சியை குறிப்பிடலாம். இதேபோன்று அவர் இயக்கும் பேட்ட, மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என அனைத்து படங்களிலும் பழைய ரெட்ரோ கார் காட்சிகள் இடம்பெறுகின்றன.

பேட்ட சண்டை காட்சி: ஜிகர்தண்டா படத்திற்கு பிறகு இறைவி படத்தை இயக்கியிருந்தார் கார்த்திக். இப்படம் இவர் எடுத்த படங்களிலேயே மிகவும் வித்தியாசமானது. பெண்ணியத்தை பேசிய படம் இறைவி. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா என்ற நடிப்பு அரக்கன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கிறார். இதைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து பேட்ட படத்தை இயக்கியிருந்தார். இப்படம் ரஜினி ரசிகனாக தரமான சம்பவம் செய்திருப்பார். பேட்ட படம் முழுக்க ரசிகர்கள் ரசிக்க கூடிய படமாகவே இருந்தன. 80களில் வந்த ரஜினியை மீண்டும் பார்த்தது போன்ற உணர்வை அளித்திருப்பார் கார்த்திக் சுப்பராஜ். சிம்ரனுடன் வரும் காதல் காட்சிகள் ரசிக்க வைத்தன. ஆக்சன் காட்சிகளில் ரஜினியிஷம் தெரிந்திருக்கும். இந்த காட்சி எவர்க்ரீன் கல்ட் சீன் என்றே குறிப்பிடலாம். ஜிகர்தண்டா படத்தினை போன்றே பேட்ட படத்திலும் ரெட்ரோ காரை வைத்து ஒரு சீன் எடுத்திருப்பார் கார்த்திக் சுப்பராஜ். மாளவிகா மோகனின் தந்தையை கொலை செய்த முத்துக்குமாரை ரஜினி கொலை செய்வது போன்ற காட்சி. இதில் ரஜினி துள்ளலான டான்ஸூடன் நடந்து சென்றபடியே ரெட்ரோ காரின் டிக்கியை திறந்து துப்பாக்கியை எடுப்பது செம மாஸாக இருக்கும். கார்த்திக் சுப்பராஜின் ஐகானிக் காட்சிகளில் இதுவும் ஒன்று. இந்த காட்சியை எடுக்கும் போது ரியல் ரஜினியை பார்த்தது பாேன்ற உணர்வை தந்ததாக பலரும் சிலாகித்து பேசியுள்ளனர். ரஜினி பெஸ்ட் ஆக்சன் காட்சிகளில் பேட்ட படமும் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

retro-car-scenes-featured-in-karthik-subbarajs-films

மகான் சண்டை காட்சி: அதேபோன்று மகானாக வாழ ஆசைப்படும் மனைவி. அப்படி ஒரு வாழ்க்கையை வெறுத்து சாதாரண மனிதனாக இருக்கும் விக்ரம் தனது கேங்ஸ்டராக எப்படி மாறினார் என்பது தான் கதை. கதைப்படி சண்டையே போட தெரியாத மகான் வீரர் ஆகும் காட்சிகள் தரமான சம்பவம் தான். விக்ரம் இப்படத்தில் நடிப்பில் மட்டும் அல்ல ஆக்சன் காட்சிகளிலும் மிரட்டி எடுத்திருப்பார். ஜிகர்தண்டா, பேட்ட படத்தினை போன்றே இப்படத்திலும் ரெட்ரோ காரில் இருந்துகொண்டே ஆக்சன் காட்சிகளை படம்பிடித்திருப்பார் கார்த்திக் சுப்பராஜ். குறிப்பாக கார்த்திக் சுப்பராஜ் படங்களில் ரெட்ரோ கார் ஒரு கதாப்பாத்திரமாக வாழ்ந்து வருகிறது. மகான் படத்தில் மொரட்டு போதையில் இருக்கும் விக்ரம் ரெட்ரோ காரில் அமர்ந்திருப்பார். அப்போது பாபி சிம்ஹா மற்றும் அவரது மகனை ரவுடி கும்பல் கொலை செய்ய திட்டமிட்டிருப்பார்கள். அந்த சம்பவத்தை தடுத்து எதிரிகளை எதிர்த்து விக்ரம் சண்டை போடுவார். ஆக்சன் காட்சிகளும் கொடூரமாக இருக்கும். எப்படி எதிரிகளை வீழ்த்தினார் என்பது ஆச்சரியத்தை அளித்தாலும். மகான் படத்தில் சிறந்த ஆக்சன் காட்சிகளில் ஒன்றாக இருக்கிறது.

ஜகமே தந்திரம்: மகான் படத்தை தொடர்ந்து ஜகமே தந்திரம். இதில் ஹீரோவின் என்ட்ரியை பழைய ரெட்ரோ காரை வைத்து ரயிலை மறிப்பது தான். தனுஷ் என்ட்ரி கொலை மாஸாக இருக்கும். இதற்கு முன்பு காரை ஒரு பொருளாக அல்லது மனிதர்களை ஏற்றி செல்லும் வசதி கொண்ட காராக பார்த்திருப்போம். ஆனால், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது படங்களில் கார் சீன்களை சென்டிமென்டாகவே பயன்படுத்தி வருகிறார். இயக்குநர் செல்வராகவனுக்கு முதல் காதலை போல கார்த்திக் சுப்பராஜூவிற்கு ரெட்ரோ கார் சென்டிமென்ட் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது. இதனை ரசிகர்களும் ரசிக்கிறார்கள் என்பதே உண்மை. அதேபோன்று ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் காரில் ஆக்சன் காட்சிகள் இடம்பிடித்திருக்கும். வில்லனுக்கு தேள் கொட்டுவது போல் ஹீரோ ஒரு காட்டு காட்டிவிட்டு செல்வது போன்று அமைத்திருப்பார் கார்த்திக் சுப்பராஜ்.

retro-car-scenes-featured-in-karthik-subbarajs-films

ரெட்ரோவிலும் வரும் அந்த கார்: கார்த்திக் சுப்பராஜூவும் பழைய ரெட்ரோ காரை வைத்து ஒரு வெப்சீரிஸ் எடுக்கலாம். அவர் இயக்கிய அனைத்து படங்களிலும் போஸ்டர்களிலும், டிரைலர்களிலும் ரெட்ரோ கார் இடம்பிடித்துவிடுகிறது. அதேபான்று ரெட்ரோ படத்தில் சூர்யாவின் போஸ்டரும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ரசிகர்களை மிகவும் கவர்ந்த போஸ்டராகவும் படமாகவும் வந்துள்ளது. கார்த்திக் சுப்பராஜூவிற்கும் ரெட்ரோ காருக்கும் என்ன பந்தம் என்ன என்பதை பண்ணையாரும் ப்த்மினி போன்று கார்த்திக்கும் ரெட்ரோவும் என ஒரு படத்தை இயக்கினால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் விரும்பி கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X