80- களில் நடக்கும் தாதா கதை.. பழைய லுக்கில் ஸ்டைலாக மிரட்டும் ஹீரோ.. மதுரையில் எப்ப ஷூட்டிங்..?

By

சென்னை: பழைய லுக்கில் மிரட்டும், நடிகர் உபேந்திராவின் போஸ்டர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

பல மொழிகளில் உருவாகும் படங்ளை எடுப்பதில் தயாரிப்பாளர்களும் ஹீரோக்களும் இப்போது ஆர்வம் காட்டி வருகின்றனர்.

யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து கடந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம், கேஜிஎஃப்.

ரூ.100 கோடி

ரூ.100 கோடி

பிரசாந்த் நீல் இயக்கி இருந்த இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில், வெளியானது. கன்னடத்தில் அதிக செலவில் உருவான படமும் இதுதான். அனைத்து மொழிகளிலும் வசூலை வாரிக்குவித்த இந்தப் படம், கன்னட சினிமாவில் ரூ.100 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது.

கேஜிஎஃப் சாப்டர் 2

கேஜிஎஃப் சாப்டர் 2

இதைத் தொடர்ந்து கேஜிஎஃப் படத்தின் 2 ஆம் பாகம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இதில் இந்தி நடிகர் சஞ்சய் தத், அதீரா என்ற கேரக்டரில் நடிக்கிறார். ரவீனா டாண்டன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டது. கிளைமாக்ஸ் காட்சி மட்டுமே பாக்கி இருந்த நிலையில் லாக்டவுனால் ஷூட்டிங் தடைபட்டுள்ளது.

மெகா பட்ஜெட்

மெகா பட்ஜெட்

இதற்கிடையில், கேஜிஎஃப் பார்முலாவை பின்பற்றி மெகா பட்ஜெட்டில் படங்கள் உருவாகத் தொடங்கியுள்ளன. இப்போது பிரபல நடிகர் உபேந்திராவும் இந்த பார்முலாவில் களமிறங்கியுள்ளார். இவர் இப்போது கப்ஸா (Kabza) என்ற படத்தில் நடிக்கிறார். ரூ.50 கோடியில் உருவாகும் இந்தப் படத்தை சந்துரு இயக்குகிறார். 80-களில் நடப்பது போல இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது.

சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி

தாதா கதையான இதில், பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, நானா படேகர், பிரதீப் ராவத், சமுத்திரக்கனி உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த லாக்டவுன் நேரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. பிறகு அடுத்த லுக் வெளியிடப்பட்டது. அதில் புல்லட்டில் அமர்ந்தபடி ஸ்டைலாக இருக்கிறார் உபேந்திரா.

30 சதவிகித ஷூட்டின்

30 சதவிகித ஷூட்டின்

பின்னால் ஷோலே பட போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது. படம் பற்றி இயக்குனர் சந்துரு கூறும்போது, இதில் தாதாவாக நடிக்கிறார் உபேந்திரா. இதற்காக தாதாக்களின் வாழ்க்கையை ஆய்வு செய்து கதையை உருவாக்கி இருக்கிறோம். 80-களில் நடக்கும் கதையான இந்த படம், கன்னடம், தமிழ், இந்தி, தெலுங்கு உட்பட 7 மொழிகளில் உருவாகிறது.

சத்யம் படத்தில்

சத்யம் படத்தில்

30 சதவிகித ஷூட்டிங்கை முடித்துவிட்டோம். பெங்களூரு, மதுரை, மும்பை, மங்களூரு உட்பட பல பகுதிகளில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. வித்தியாசமான ஆக்‌ஷன் படமாகவும் காட்சிகள் மிரட்டும் விதமாகவும் இருக்கும்' என்றார். தமிழில் விஷாலின் சத்யம் படத்தில் முக்கிய கேரக்டரில் உபேந்திரா நடித்திருந்தார் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X