ரெட்ரோ படத்தில் நடிகையின் பெயர் இதுதானா.. காதலில் உருக வைக்கும் சந்தோஷ் நாராயணன்!

சென்னை: கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ரெட்ரோ படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் கேங்ஸ்டராக சூர்யா நடித்திருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் படம் என்றாலே மதுரையை களமாக படம் எடுக்க கூடியவர். கார்த்திக் - சூர்யா காம்போவில் உருவாகும் படம் என்பதால் ஆவலும் அதிகரித்துள்ளது. இதனிடையே இப்படத்தின் கனிமா என்ற 2வது பாடல் நாளை வெளியாக இருப்பதாகவும், இதயத்தை நனைக்கு அடுத்த ரொமாண்டிக் பாடல் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கங்குவா படத்திற்கு சூர்யா ரெட்ரோ படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார். அவர் நடிப்பில் கடைசியாக ஹிட் அடித்த படம் என்றால் ஜெய்பீம் தான். இப்படத்திற்கு அவர் நடித்த எதற்கும் துணிந்தவன், கங்குவா படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு கங்குவா படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தன. படம் முழுக்க இறைச்சல் அதிகமாக இருந்தது. இப்படம் எதை பற்றி சொல்ல வருகிறது என விமர்சிக்க தொடங்கின. இப்படத்திற்கு பின்பு சூர்யா ரெட்ரோ, வாடிவாசல், தெலுங்கு இயக்குநருடன் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார்.

retro-movie-2nd-song-kanima-promo-out

கண்ணாடி பூவே: ரெட்ரோ படத்தை சூர்யா ஜோதிகாவின் 2D Productions, கார்த்திக் சுப்புராஜின் Stone bence நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் டீசரில் பூஜா ஹெக்டே ஊமை பெண்ணாக நடித்திருக்கிறார் என்பது தெரியவந்தது. சூர்யாவின் கெட்டப்புகளும் வில்லன்களை துவம்சம் சம்பவக்காரன் என்பதும் டீசரில் தெரியவந்தது. கடந்த மாதம் வெளியான கண்ணாடி பூவே பாடல் பட்டி தொட்டியெங்கும் கலக்கியது. சந்தோஷ் நாராயணன் இதயத்தை கரைக்கும் குரலில் பாடி இளைஞர்களை கட்டி போட்டார். ஜெயிலில் இருந்து காதலியை நினைத்து உருகும் பாடலாகவும் இருந்தது.

கனிமா புரோமோ: கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படங்களில் தனித்துவம் என்ன என்றால் மதுரையை மையப்படுத்தி ஒரு காட்சியாவது இடம்பெறும். அவரது சொந்த ஊர் மதுரை என்பதாலே அந்த பாசம் ஒட்டிக்கொண்டுள்ளது. ஜிகர்தண்டா படத்தில் இருந்தே தொடங்குகிறது. அவர் இயக்கும் படங்களும் இதேபோன்று ஒரு தனித்துவத்தை படைத்து விடுவார். தற்போது படத்தின் இரண்டாவது பாடலின் புரோமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர். ரெட்ரோ படத்தில் இடம்பிடித்திருக்கும் கண்ணாடி பூவே, கனிமா பாடல்கள் க வரிசையில் இடம்பிடித்திருக்கின்றன.

retro-movie-2nd-song-kanima-promo-out

க வரிசை பாடல்: கங்குவா படத்தின் தோல்விக்கு பிறகு சூர்யாவின் பெரிய நம்பிக்கை ரெட்ரோ. நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காகவே க வரிசை பாடல்களை தேர்ந்தெடுத்துள்ளார் போலும் என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர். கண்ணாடி பூவே போன்று கனிமா பாடலும் காதல் பாடலாக இருக்கிறது. குத்து பாடல் இதுவரை வெளியாகவில்லை. கார்த்திக் சுப்பராஜ் படத்தில் இடம்பிடிக்கும் குத்து பாடல்கள் இப்படத்தில் இல்லையோ என ரசிகர்கள் ஏங்க தொடங்கிவிட்டனர். எல்லாமே க வரிசையில் பாடல் தொடங்குவதாகவும் தெரிவிக்கின்றனர். கனிமா பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. கனிமா என்பது பூஜா ஹெக்டேவின் கதாப்பாத்திர பெயராக இருக்கும் என நெட்டிசன்கள் யூகிக்க தொடங்கிவிட்டனர் ஒரு வேளை கனிமொழியாக இருக்கலாம் என பேச தொடங்கிவிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X