Retro Official Box Office: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் ’ரெட்ரோ’ வசூல்!.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: 2டி நிறுவனம் தயாரிப்பில் சூர்யா, பூஜா ஹெக்டே, நாசர், பிரகாஷ் ராஜ், ஜெயராம், விது, கருணாகரன், சிங்கம்புலி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் மே 1ம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூலை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தங்களது சொந்த பேனரான 2டி நிறுவனத்தில் இந்த ரெட்ரோ படத்தை தயாரித்தனர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனமும் இணைந்து தயாரித்த நிலையில், சக்தி ஃபிலிம் பேக்டரி தமிழ்நாட்டு விநியோகஸ்தர் உரிமையை பெற்று ரிலீஸ் செய்தது.

Retro Official Tamil Nadu Kerala and Karnataka Box Office details out now

ரெட்ரோ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில், அதற்கு போட்டியாக நானியின் ஹிட் 3 மற்றும் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளிட்ட படங்கள் வெளியான நிலையிலும் இப்படியொரு வசூலை வசூல் செய்திருப்பது பெரிய விஷயம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சோலோ ரிலீஸ் கிடையாது: அஜித் குமாரின் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி உள்ளிட்ட படங்கள் இந்த ஆண்டு சோலோவாக வெளியாகின. ஆனால், சூர்யாவின் ரெட்ரோ படத்துக்கு இந்தியா முழுவதும் பல இடங்களிலும் பெரிய பெரிய படங்கள் போட்டியாக வெளியாகின. இந்தியில் ரெய்டு 2, தெலுங்கில் ஹிட் 3, மலையாளத்தில் கடந்த வாரம் வெளியான மோகன்லாலின் துடரும் படம் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி என பல படங்கள் போட்டிப் போட்டன. கடந்த வாரம் வெளியான வடிவேலுவின் கேங்கர்ஸ் திரைப்படமும் கணிசமான தியேட்டர்களை பிடித்துள்ள நிலையில், ரெட்ரோ படத்தின் வசூல் கங்குவா அளவுக்கு வரவில்லை என்கிற குறை ரசிகர்கள் மத்தியில் எழுந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து ஹேப்பியாகி உள்ளனர்.

தமிழ்நாட்டில் முதல் நாள் வசூல்: ரெட்ரோ படம் தமிழ்நாட்டில் மட்டும் 17.75 கோடி வசூலை ஈட்டியிருப்பதாக சக்தி ஃபிலிம் ஃபேக்டரி அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளது. அதனை 2டி நிறுவனம் ரீ ட்வீட் செய்து ரெட்ரோ படத்துக்கு அன்பான ஃபேன்ஸ் காட்டிய ஆதரவுக்கு நன்றி எனக் கூறியுள்ளது. மேலும், தியேட்டர்களில் வார இறுதி நாட்களுக்கான டிக்கெட் புக்கிங் சூப்பராக நடைபெற்று வருவதாக அறிவித்துள்ளனர்.

ரெகுலர் டிக்கெட் ரேட்: சூர்யாவின் ரெட்ரோ படத்துக்கு சிறப்புக் காட்சிக்காக தனிப்பட்ட முறையில் 500 ரூபாய்க்கோ 1000 ரூபாய்க்கோ டிக்கெட்டுகளை விற்பனை செய்து இந்த பாக்ஸ் ஆபீஸ் அறிவிப்பை வெளியிடவில்லை என டாப் ஹீரோக்களை குத்திக்காட்டும் படியான ரெகுலர் டிக்கெட் ரேட்ஸ் என்கிற வாசகம் இடம்பெற்றிருப்பதை பார்த்த ரசிகர்கள் விஜய் மற்றும் அஜித் குமாரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

Retro Official Tamil Nadu Kerala and Karnataka Box Office details out now

கர்நாடகா மற்றும் கேரளாவில் இத்தனை கோடியா?: தமிழ்நாட்டு வசூலை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி அறிவித்த நிலையில், கர்நாடகாவின் விநியோகஸ்தரான ஸ்வாகத் எண்டர்பிரைசஸ் 3.07 கோடி ரூபாய் வசூல் என்றும் கேரளாவில் 2.5 கோடி வசூல் என கேரளா விநியோகஸ்தரும் போஸ்டர்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் மட்டுமே 27 கோடி வரை படம் முதல் நாளில் வசூல் வந்திருக்கும் என்கின்றனர். உலகளவில் எந்தளவுக்கு ரெட்ரோ வசூல் செய்தது என்பதை 2டி நிறுவனம் வெளியிட வேண்டும் என சூர்யா ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X