Retro Public Review: சூர்யாவின் கம்பேக்கா? கார்த்திக் சுப்புராஜின் சொதப்பலா? ரெட்ரோ பப்ளிக் விமர்சனம்
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா, நடிகை பூஜா ஹெக்டே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இன்று அதாவது மே 1ஆம் தேதி வெளியாகியுள்ள படம் ரெட்ரோ. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படம் எப்படி உள்ளது என்பது குறித்து தங்களது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்கள். இது படக்குழுவினர் கவனத்தை ஈர்த்துள்ளது.
படம் பார்த்த ரசிகர் ஒருவர், " ரெட்ரோ படம் சூர்யாவுக்கு மாஸ் கம்பேக் படம். எனக் கூறலாம். படத்தில் சூர்யா, ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், பூஜா ஹெக்டே என அனைவரது நடிப்பும் சிறப்பாக உள்ளது. படத்தை பொறுமையாக அமர்ந்து பார்த்தால் சிறப்பான படம் எனக் கூறும் அளவுக்கு படத்தை எடுத்துள்ளார்கள்" என கூறியுள்ளார்.
அதேபோல் மற்றொரு ரசிகர் கூறும்போது, " த்ரி டிராகன் டெம்ப்ளேட் போல், கார்த்திக் சுப்புராஜ், சூர்யா, சந்தோஷ் நாராயணன் என மூவரும் இணைந்து மிரட்டி விட்டுள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் படத்தை தனது இசையின் மூலம் செதுக்கியுள்ளார். கதாநாயகனுக்கு மாஸ் என்று இல்லாமல், கதையை மாஸாக உருவாக்கியுள்ளார். படம் கமர்ஷியல் படத்தைப் போல் எல்லோருக்கும் உடனே செட் ஆகாது. படம் ஸ்லோவா சென்றாலும் கார்த்திக் சுப்புராஜ் மேக்கிங் சிறப்பாக இருந்தது. இடைவேளை காட்சி அட்டகாசமாக இருந்தது. இது காதல் படம் என்பதற்கு மிகவும் அழகாக காட்சிகள் வைத்துள்ளார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

எதிர்பார்ப்பு: ரசிகை ஒருவர் கூறும்போது, " படத்தை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் பார்க்க வந்தேன். படத்தில் ஒரு 15 நிமிட காட்சி உள்ளது. அது நான் எதிர்பார்க்கவே இல்லை. மிகவும் சிறப்பாக உள்ளது. படம் ஸ்லோவாகச் சென்றாலும் சந்தோஷ் நாராயணனின் இசை, படத்தை திருப்தியாக மாற்றுகிறது. சூர்யாவின் ரசிகையாக எனக்கு இந்த படம் மிகவும் பிடித்துள்ளது" என கூறியுள்ளார்.
சொதப்பல்: அதேபோல் ரசிகர் ஒருவர், கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்திற்காக நிறைய எழுதியுள்ளார் என்பது தெரிகிறது. இன்னும் சொல்லப்போனால் ஜகமே தந்திரம் படத்தை சிறப்பாக எடுக்க வேண்டும் என முயற்சி செய்துள்ளார். மீண்டும் ஒரு முறை நல்லபடியாக முயற்சி செய்ய வாழ்த்துகள். ஜகமே தந்திரம், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என இரண்டு படங்களையும் சேர்த்து வைத்து ரெட்ரோ என எடுத்துள்ளார். ஆனால் படம் ஒட்டவில்லை. நம்ம ஊர் படம் பார்க்கிறோம் என்ற உணர்வைத் தரவில்லை. வெளிநாட்டுப் படம் போல இருந்தது" எனத் தெரிவித்துள்ளார்.

எடுபடவில்லை: மற்றொரு ரசிகர் கூறும்போது, " தியேட்டருக்குள் உட்கார முடியவில்லை. படம் சூர்யாவுக்கு கம்பேக் படமாக இருக்கும் என நினைத்து வந்தேன். ஆனால் படம் ஆவரேஜ் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு உள்ளது. சூர்யாவின் நடிப்பு சிறப்பாக உள்ளது. ஆனால் படமாக இந்த படம் சொதப்பல் தான். சூர்யா அடுத்த படத்திலாவது கம்பேக் கொடுக்க வேண்டும். அதேபோல் கார்த்திக் சுப்புராஜ் புதிய கதைகளில் படம் எடுக்க வேண்டும். அவர் எடுத்த படத்தில் இருந்தே சில காட்சிகளை உருவி அதை வேற மாதிரி கொடுத்துள்ளார். படம் கொஞ்சமும் எடுபடவில்லை" எனத் தெரிவித்துள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது சூர்யா ரசிகர்களை கொஞ்சம் அப்செட் ஆக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











