Retro Box Office: அடேங்கப்பா.. சூர்யாவோட ரெட்ரோ மொத்த வசூல் 235 கோடியாம்.. ஆனால், ட்விஸ்ட்டு!

சென்னை: சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து 2டி நிறுவனம் சார்பில் தயாரித்த ரெட்ரோ திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை விட குறைவான வசூலை தான் அள்ளியதாக திருச்சி ஸ்ரீதர் படைத்தலைவன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

நடிகர் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடித்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த மே 1ம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம் 104 கோடி வரை வசூல் ஈட்டிய அறிவிப்பை மட்டுமே கடைசியாக 2டி நிறுவனம் வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று இரவு திடீரென ரெட்ரோ திரைப்படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 235 கோடி ரூபாய் என புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Retro worldwide Total Revenue crossed 235 Crore officially updated by 2D Entertainment

அதை பார்த்த அஜித் ரசிகர்களே ஷாக் ஆகிவிட்டனர். அடேங்கப்பா சூர்யாவின் ரெட்ரோ, குட் பேட் அக்லி வசூலையே முறியடித்து விட்டதா என அதிர்ச்சியடைந்த நிலையில், அதிலும் ஒரு செம ட்விஸ்ட் வைத்து உள்ளது 2டி நிறுவனம்.

235 கோடி வசூல்: 65 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் ஒட்டுமொத்தமாக 235 கோடி வசூலை வாரியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை 2டி நிறுவனம் வெளியிட்டுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான எந்தவொரு படமும் இதுவரை 200 கோடி பாக்ஸ் ஆபீஸை தொடாத நிலையில், ரெட்ரோ படமும் அதை எட்டவில்லை என்றே பாக்ஸ் ஆபீஸ் தகவல்களை ஷேர் செய்யும் sacknilk உள்ளிட்ட வெப்சைட்டுகள் தகவல் தெரிவித்து இருந்தன. ஆனால், தயாரிப்பு நிறுவனமே இப்படியொரு போஸ்டரை வெளியிட ஒட்டுமொத்த கோலிவுட்டும் என்ன மேட்டர் என உற்றுநோக்கி வருகிறது.

அதை ஜூம் பண்ணித்தான் பார்க்கணும்: ஆனால், அந்த போஸ்டரில் செம ட்விஸ்ட்டாக ரைட் சைடு கார்னரில் ரொம்ப சின்ன ஃபான்ட் சைஸில் 'தியேட்டர் மற்றும் நான் தியேட்டரிக்கல் வருமானம்' எனக் குறிப்பிட்டுள்ளனர். ரெட்ரோ படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் மட்டும் இது அல்ல என்றும் ஓடிடி, சாட்டிலைட் உரிமம், ஆடியோ ரைட்ஸ் என அனைத்து விதமான வியாபாரத்தையும் சேர்த்து தான் 235 கோடி வந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

யாருக்காக இந்த அறிவிப்பு?: ரெட்ரோ திரைப்படம் மிகப்பெரிய லாபத்தை ஈட்டிய படம் என்பதை தெளிவாக தமிழ் சினிமாவுக்கு தெரிவிக்கவே இப்படியொரு அறிவிப்பை 2டி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை வெளியான படங்களில் அதிகபட்சமாக அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் 200 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியதாக அறிவித்தனர். பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் 150 கோடி வரை வசூல் செய்தது. விடாமுயற்சி, மத கஜ ராஜா, டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

சூர்யா 45 படத்துக்கான புரமோஷன்: டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை விட பல மடங்கு லாபத்தை ரெட்ரோ படம் அடைந்துள்ளது என்பதை அறிவிக்கவே 2டி நிறுவனம் அனைத்து லாப கணக்குகளையும் வெளியிட்டுள்ளதாக கூறுகின்றனர். இதே ரூட்டை இனிமேல் வரும் புதிய படங்களும் கடைபிடிக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், சூர்யா 45 படத்துக்கான புரமோஷனாகவும் இது அமையும் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X