காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரன் பேத்தியாம்மா இது?.. கிளாமர் தூக்கலாக இப்படி ஃப்ரீ ஷோ காட்டுறாரே!

சென்னை: காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன். அதே கண்கள், நான், மூன்றெழுத்து என அந்த காலத்திலேயே பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். அதன் பின்னர் குணசித்ர நடிகராக மாறிய அவர் ரஜினிகாந்தின் அருணாச்சலம், விஜயகாந்தின் ரமணா, பரத் மற்றும் தமன்னா நடிப்பில் வெளியான கண்டேன் காதலை என பல படங்களிலும் நடித்தார். அவரது மகள் லாவண்யா ஸ்ரீராம் பரத நாட்டிய டான்சராக அசத்தினார். சினிமாவில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

ஆனால், பேத்தி தான்யா ரவிச்சந்திரன் தனது தாத்தாவை போலவே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். 2016ம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியான பலே வெள்ளையத்தேவா படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார் தான்யா ரவிச்சந்திரன்.

tanya ravichandran heroine glamour

அருள் நிதியுடன் பிருந்தாவனம், விஜய் சேதுபதியுடன் கருப்பன் உள்ளிட்ட படங்கள் அவருக்கு பெரிதாக கைகொடுத்தன. தெலுங்கிலும் அவர் நடித்த ராஜ விக்ரமர்கா படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட்டாக அவர் வெளியிட்டுள்ள செம கிளாமரான போட்டோக்கள் ரசிகர்களை வாய் பிளந்து பார்க்க வைத்து வருகிறது.

சுடிதாரும் சேலையும் தான்: சினிமாவில் பெரும்பாலும் தான்யா ரவிச்சந்திரன் சுடிதார் அணிந்தும் அல்லது சேலை கட்டியும் தான் பொதுவாக நடித்து வருகிறார். பாடல் காட்சிகளில் கூட கிளாமர் உடைகளை அணிந்து குத்தாட்டம் போட்டது கிடையாது. நெஞ்சுக்கு நீதி, மாயோன், ட்ரிக்கர், ஜெயம் ரவியின் அகிலன், அர்ஜுன் தாஸின் ரசவாதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள தான்யா அடுத்ததாக கிருஸ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் ரெட்ட தல படத்தில் நடித்து வருகிறார்.

tanya ravichandran heroine glamour

டோட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன்: தெலுங்கில் சிரஞ்சீவி, சல்மான் கான் மற்றும் நயன்தாராவுடன் இணைந்து மோகன் ராஜா இயக்கத்தில் காட் ஃபாதர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் காதலிக்க நேரமில்லை படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் அதற்கு முன்னதாக வெளியான பேப்பர் ராக்கெட் படத்தில் காளிதாஸ் ஜெயராமுடன் இணைந்து நடித்திருந்தார். இந்நிலையில், தற்போது இன்ஸ்டாகிராமில் டோட்டலாக கவர்ச்சி புயலாக மாறி அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் லைக்குகளை அள்ளி தீயாக பரவி வருகின்றன.

tanya ravichandran heroine glamour

ரவிச்சந்திரன் பேத்தியா இது?: பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் பேத்தியா இது என ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துவிட்டனர். ரெட்ட தல படத்தில் கிளாமர் ரோலில் நடித்து வருகிறாரா அல்லது அடுத்ததாக கவர்ச்சி கதாபாத்திரங்களை தேடி வருகிறாரா? திடீரென இப்படி டோட்டலா சேஞ்ச் ஓவர் ஆகிட்டாரே என சட்டை பட்டனை கழட்டிவிட்டு செம ஹாட்டாக தொடையழகு தெரிய போஸ் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர்.

tanya ravichandran heroine glamour

இன்ஸ்டாகிராமில் இதுவரை இந்தளவுக்கு கவர்ச்சி போட்டோக்களை இவர் வெளியிடாத நிலையில், மொத்தமே 5 லட்சம் ரசிகர்கள் தான் உள்ளனர். இவரது இந்த புது கிளாமர் குயின் அவதாரத்தை பார்த்தால் ஏகப்பட்ட ஃபாலோயர்கள் இன்ஸ்டாகிராமில் இவரை தேடி பிடித்து ஃபாலோ செய்ய தொடங்கி விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மற்றும் தெலுங்கில் தான்யாவுக்கு மேலும், அதிக படங்களை இயக்குநர்கள் கொடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X