Just In
- 3 hrs ago
பேய் அறைஞ்ச மாதிரியே இருக்கும் ரியோ.. ட்ரோல்களை கண்டு துவண்டு விடாதே என பாடம் நடத்திய கமல்!
- 4 hrs ago
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
- 4 hrs ago
பாராட்டு மழையில் நனைந்த மாஸ்டர் மகேந்திரன்... நீண்ட வருட உழைப்புக்கு கிடைத்த வெற்றி!
- 4 hrs ago
இந்த பிக் பாஸ் சீசனை கெடுத்ததே இவங்கதான்.. அர்ச்சனாவை குற்றம்சாட்டும் நெட்டிசன்கள் ஏன்?
Don't Miss!
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Automobiles
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Lifestyle
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
புத்தம் புதிதாய் ரெட்டை ரோஜா... இது காம்பில் பூக்கவில்லை.. ஜீ தமிழ் டிவியில் பூத்த மலர்கள்!
சென்னை: மாமியார் மருமகள் சண்டை, குடும்ப பகை, சொத்து சண்டை இவற்றை தாண்டி புதுமையான கதை களத்தில் தொடர்கள் வெளிவந்தால் தான் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்பது இன்றைய நிலை. அதனால் சேனல்களும் ரொம்ப யோசித்து, புதிய கதை களத்தில் தொடர்களை ஒளிபரப்பி வருகிறது.
அந்த வரிசையில் ஜீ தமிழ் சேனலில் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டை சகோதரிகளுக்கு இடையே வரும் ஈகோ பிரச்சினைகளை மையமாக வைத்து ரெட்டை ரோஜா என்ற தொடர் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் வெள்ளிவரை பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
சில நாட்களுக்கு முன்பு ஜீ தமிழின் டாக் ஷோ இயக்குனர் கரு. பழனியப்பன் தொகுத்து வழங்கும் தமிழா தமிழா நிகழ்ச்சியில் இரட்டை சகோதர்ர்கள் மற்றும் சகோதரிகள் வாழ்க்கை முறை, விட்டு கொடுத்தல் சேட்டைகள் என அனைத்தையும் பேசி விளக்கினர். அதையே கருவாக்கி புதிய சீரியலாகவும் ஆக்கி விட்டனர்.
அடடே.. நயனுக்கு மச்சம் மாறிப் போச்சேய்யா.. கோலிவுட்டை கலக்கும் புதுப் புயல்!

ரெட்டை ரோஜா
நான்கு நிமிடங்களுக்கு முன்னாடி பிறந்ததால் அக்காவாகிவிட்டதோடு அனைத்து பெருமைகளும், புகழும், முக்கியத்துவமும் அவளுக்கு போய் சேருகிறது. அக்கா தன் தங்கையை ஒடுக்கி ஆள நினைப்பது போல் கதை வடிவமைக்கப் பட்டுள்ளது. அனு, அபி இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பியை மணப்பதால் ஏற்படும் பிரச்சினைகளும், தீர்வுகளும்தான் கதை.

சகோதரிகள் கதை
எல்லாமே எனக்கு மட்டும்தான் கிடைக்கணும்னு நினைக்கும் அக்கா, அக்காமேல் பாசமாக இருக்கும் தங்கை என கதை நகர்கிறது. அண்ணனை அக்கா திருமணம் செய்ய தங்கைக்கு அதே வீட்டில் மணமாலை கிடைக்கிறது. இதனால் அக்காவின் பொறமை அதிகரிக்கிறது. பிறந்த வீட்டில் ஏற்பட்ட பிரச்சினை புகுந்த வீட்டிலும் தொடர்கிறது

பிரபல நட்சத்திரங்கள்
அனு மற்றும் அபியாக ஷிவானி, ராஜா ராணி புகழ் அக்ஷய் கமல், கரன் சாகர், சபீதா ஆனந்த், பூவிலங்கு மோகன் உள்பட பலர் நடிக்கும் இந்த தொடரை மணிகண்ட குமார் இயக்குகிறார், ஸ்ருதி ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.

இரட்டை சகோதரர்கள்
ஏற்கனவே டிஆர்பி யில் ஜீ தமிழிற்கு டஃப் கொடுக்கும் விஜய் தொலைக் காட்சியில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்' என்ற இரட்டை சகோதரர்கள் கதை ஓடுகிறது. ஏனோ தெரியவில்லை இப்போதெல்லாம் படத்தின் டைட்டிலே சீரியல்களுக்கும் வைக்கப்படுகின்றன. பழைய சினிமா பட டைட்டிலை புதுப்படங்களுக்கு வைக்க போர்க்கொடி தூக்குபவர்கள் இனி இதற்கும் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புகள் உண்டு.