25 ஆண்டுகளுக்கு பிறகு 90 களின் டாப் ஹீரோக்களை ஒன்று சேர்க்கும் வெங்கட் பிரபு

சென்னை : கோலிவுட்டில் கமர்ஷியல் ஹிட் கொடுக்கும் டாப் டைரக்டர்களில் ஒருவராக இருப்பவர் வெங்கட் பிரபு. சிவகாசி, ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட பல படங்களில் முக்கிய ரோல்களில் நடித்த வெங்கட் பிரபு, சென்னை 28 படத்தின் மூலம் டைரக்டர் ஆனார்.

ஏரியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் படமான சென்னை 28 மிகப் பெரிய வெற்றிபடமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து சரோஜா, பிரியாணி, மங்காத்தா, சென்னை 28 இரண்டாம் பாகம் உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கினார்.

சமீபத்தில் தான் சிம்பு நடித்த மாநாடு படத்தை இயக்கி முடித்தார். மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் மாநாடு, விரைவில் ரிலீசாக உள்ளது. அரசியல், த்ரில்லர் கலந்த சையின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகி இருக்கம் மாநாடு படத்தில் கல்யாணி பிரியதர்ஷினி, பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

After 25 years Prabhu Deva and Arvind Swamy will reunite in Venkat Prabhus next

மாநாடு படத்துடன் சேர்த்து லைவ் டெலிகாஸ்ட் வெப் சீரிஸ், கன்னட ஹீரோ கிச்சா சுதீப்பை வைத்து கசடதபற ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளார். வெங்கட் பிரபுவின் முதல் வெப்சீரிசான லைவ் டெலிகாஸ்ட் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. கசடதபற படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் அடுத்த படத்தின் வேலைகளையும் வெங்கட் பிரபு துவக்கி உள்ளாராம். மல்டி ஸ்டார் படமான இதில் அரவிந்த் சாமி, பிரபு தேவா ஆகியோர் மிக முக்கிய ரோல்களில் நடிக்க போகிறார்களாம். இந்த பிரம்மாண்ட படத்தை வெங்கட் பிரபுவின் நெருங்கிய நண்பரும் நடிகருமான நிதின் சத்யா தயாரிக்க போகிறாராம்.

பிரபு தேவாவும், அரவிந்த் சாமியும் இணைந்து 1997 ல் வெளியான மின்சார கனவு படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது. ஏவிஎம் தயாரித்த இந்த படத்தை ராஜீவ் மேனன் இயக்கி இருந்தார். வழக்கமான முக்கோண காதல் கதை என்றாலும் வித்தியாசமாக, ஏ.ஆர்.ரஹ்மானின் அழகான இசையுடன் இந்த படம் அமைந்திருந்தது.

தற்போது கிட்டதட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு பிரபு தேவா, அரவிந்த் சாமி இருவரும் இணைந்து ஒரே படத்தில் நடிக்க உள்ளனர். விரைவில் இந்த படம் பற்றிய முறையான அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளதாம். 90 களின் டாப் ஹீரோக்களை மீண்டும் இணைத்து ஒரு படத்தை வெங்கட் பிரபு இயக்க போவதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X