அல்லு அர்ஜுனுக்கு நேரடி அட்டாக்.. இனிமேல் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை.. ரேவந்த் ரெட்டி அதிரடி!
ஹைதராபாத்: சந்தியா 70 எம்எம் தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக ரேவதி எனும் பெண் பலியான சம்பவம் மற்றும் அவரது மகன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது தொடர்பாக வழக்குப் பதியப்பட்டு நடிகர் அல்லு அர்ஜுன் ரெட்டி உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டு கடந்த வாரம் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நடிகர் அல்லு அர்ஜுன் ஒரு நாள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மறுநாள் ஜாமினில் வெளியே வந்த நிலையில், தெலுங்கு திரையுலகின் பல முன்னணி நடிகர்கள் அவரை வந்து சந்தித்தனர். அனைத்தையும் கண்ணாடி அறையில் அமர்ந்துக் கொண்டு ஷோவாக மாற்றி புஷ்பா 2 படத்தை 1500 கோடி வசூல் படமாக மாற்றிவிட்டார் அல்லு அர்ஜுன் என குற்றச்சாட்டுக்கள் கிளம்பின.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து சிறுவனும் மூளைச்சாவு அடைந்த நிலையில், அல்லு அர்ஜுன் செய்தது மிகப்பெரிய தவறு என கண்டனங்கள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், இன்று தெலங்கானா முதலமைச்சர் சினிமா கலைஞர்களின் செயலால் பரிதாபமாக உயிர் போனது குறித்தும் இனிமேல் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடையாது என்று பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1500 கோடி வசூல்: சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் 1500 கோடி வசூலை ஈட்டியுள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் புஷ்பா 2 அலை என்றும் இந்தி பெல்ட்டில் மட்டும் 650 கோடிக்கு மேல் வசூல் செய்து இதுவரை எந்தவொரு இந்தி மற்றும் இந்திய படங்களும் செய்யாத வசூல் வேட்டையை நடத்தியதாக புஷ்பா 2 படக்குழு மார்த்தட்டி வருகிறது.

சிறப்பு காட்சிகளுக்கு அனுமதியே கிடையாது: தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அல்லு அர்ஜுன் செய்த குற்றங்கள் குறித்து பேசினார். அதன் பின்னர், இனிமேல் எந்தவொரு படத்துக்கும் சிறப்பு காட்சிக்கான அனுமதி தான் முதலமைச்சராக இருக்கும் வரை கிடையாது என அதிரடியாக அறிவித்துவிட்டார். மேலும், சினிமா படங்கள் அதிக கட்டணத்துக்கு டிக்கெட்டுகளை விற்கவும் தடை விதிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். இதன் காரணமாக பொங்கலுக்கு வெளியாகும் ராம் சரணின் கேம் சேஞ்சர் படம் தெலங்கானாவில் பெரிதாக வசூல் செய்ய வாய்ப்பே இல்லை என்றும் இனிமேல் டோலிவுட்டிலும் பெரியளவு பாக்ஸ் ஆபிஸ் சாதனை நிகழ்த்த முடியாது என்கின்றனர்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே: கடந்த ஆண்டு பொங்கலுக்கு அஜித் ரசிகர் ஒருவர் நள்ளிரவு காட்சியின் போது உயிரிழந்த நிலையில் தான் தமிழ்நாட்டில் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அனுமதி தருவதில்லை. பெரிய படங்கள் வெளியாகும் போது மட்டும் காலை 9 மணிக்குத் தான் சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி வழங்கப்படுகிறது.
அல்லு அர்ஜுன் மீது அட்டாக்: முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் அதிரடி பேச்சுக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அல்லு அர்ஜுன் வீட்டுக்கு அணிவகுத்து சென்று விசாரித்த அளவுக்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தின் மீது காட்டாத கருணையை எடுத்துரைத்த நிலையில், அல்லு அர்ஜுனை டைரக்ட் அட்டாக் செய்திருக்கிறார் தெலங்கானா முதலமைச்சர் எனக் கூறுகின்றனர். அல்லு அர்ஜுன் இதற்கு எப்படி ரியாக்ட் செய்யப் போகிறார் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











