2 ஸ்டேட்ஸ்.... அலியாவின் அம்மாவாக ரேவதியின் இந்தி ‘மறு பிரவேசம்’
மும்பை: நடிகையும், இயக்குநருமான ரேவதி மீண்டும் இந்திப் படங்களுக்குத் நடிக்கத் திரும்பியுள்ளார். 2 ஸ்டேட்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் அவர் முக்கியப் பாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.
ஏற்கனவே இந்தியில் படம் இயக்கிய அனுபவம் உள்ளவர் ரேவதி. இந்த நிலையில் சமீபகாலமாக அவர் இந்திப் பக்கமே போகாமல் இருந்தார்.
ஆனால் தற்போது மீண்டும் இந்திக்கு அவர் வந்துள்ளார். 2 ஸ்டேட்ஸ் படத்தில் அவர் தமிழ்ப் பெண் வேடத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

சேத்தன் பகத்தின் நூல்
2 ஸ்டேட்ஸ் என்பது பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத் எழுதிய நூலாகும். சிறந்த விற்பனையைக் கண்ட இந்த நூலைத் தழுவித்தான் தற்போது இந்த புதிய இந்திப் படம் உருவாகிறதாம்.

பஞ்சாபிப் பையன்.. தமிழ்ப் பொண்ணு
இதில் பஞ்சாபி்ப் பையன் ஒருவனுக்கும், தமிழ்ப் பெண்ணுக்கும் இடையே பூக்கும் காதல் குறித்த கதையாம். இதனால் ஏற்படும் வன்முறை, மோதல் குறித்து கதை போகிறதாம்.

அர்ஜூன் கபூர், அலியா ஜோடி
இதில் நாயகியாக அலியா நடித்துள்ளார். அவரது ஜோடியாக அர்ஜூன் கபூர் நடித்துள்ளார்.

முக்கிய வேடத்தில் ரேவதி
முக்கிய வேடத்தில் ரேவதி நடித்துள்ளாராம். ஹீரோயின் அலியாவின் தாயாராக தமிழ்ப் பெண்ணாக வருகிறாராம் அவர்.

மகிழ்ச்சியில் ரேவதி
மீண்டும் இந்திப் படத்திற்குத் திரும்பியுள்ளதாலும், தனக்கு நல்ல வேடம் கிடைத்திருப்பதாலும் ரேவதி மகிழ்ச்சியுடன் உள்ளாராம்.

ராத் - லவ்
ஏற்கனவே ராத், லவ் ஆகிய இந்திப் படங்களில் நடித்துள்ளார் ரேவதி. இப்போது மீண்டும் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிக்கிறார்.

பிர் மிலங்கே
இதுபோக பிர் மிலங்கே என்ற இந்திப் படத்தை ஷில்பா ஷெட்டி, சல்மான் கான், அபிஷேக் பச்சன் ஆகியோரை வைத்து இயக்கியுள்ளார் ரேவதி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











