Don't Miss!
- Finance
பட்ஜெட்டில் வெளியான 5 முக்கிய வருமான வரி மாற்றங்கள்.. சம்பளதாரர்களுக்கு பயனளிக்குமா?
- News
"பாஜக போட்டியிட்டால் நீங்களும் வாபஸா?".. செய்தியாளர் கேட்டதும் ஜெயக்குமார் தந்த பதிலை பாருங்க
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அப்போ ஹீரோயின்.. இப்போ என்ன ரோல்? 31 வருடத்திற்கு பிறகு சல்மான் கான் படத்தில் நடிக்கும் ரேவதி!
மும்பை: மண் வாசனை, மெளன ராகம், தேவர் மகன் உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்த நடிகை ரேவதி பாலிவுட் நடிகர் சல்மான் கான் படத்தில் நடித்து வருகிறாராம்.
பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ரேவதி ஏற்கனவே சல்மான் கானுக்கு ஜோடியாகவும் இந்தியில் நடித்துள்ளது பலருக்கும் தெரிந்திருக்காது.
இந்நிலையில், பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சல்மான் கான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ரேவதி நடித்து வரும் நிலையில், அவர் என்ன ரோலில் எந்த படத்தில் நடித்து வருகிறார் என்பது குறித்து இங்கே பார்ப்போம்..
பிரபாஸிடம்
மேரேஜ்
புரோபோஸ்…
அனுஷ்காவுக்கு
ஜெர்க்
கொடுத்த
பாலிவுட்
ஹீரோயின்:

டைகர் 3
பாலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங்கான சல்மான் கான் நடிப்பில் டைகர் 3 திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இயக்குநர் மணீஷ் ஷர்மா இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப், இம்ரான் ஹாஸ்மி நடித்து வரும் டைகர் 3 படத்தில் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு இறுதியில் டைகர் 3 திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

31 ஆண்டுகளுக்கு பிறகு
தமிழில் மண் வாசனை படம் மூலம் அறிமுகமான நடிகை ரேவதி 1991ம் ஆண்டு பாலிவுட்டில் சல்மான் கானின் 'லவ்' படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். நடிகை ஸ்ரீதேவியை போலவே பாலிவுட்டில் பல படங்களில் இவர் நடித்துள்ளார். இந்நிலையில், 31 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சல்மான் கான் படத்தில் இணைந்து நடித்து வருகிறார் ரேவதி. 'லவ்' திரைப்படத்தின் "சாதியா துனே கியா கியா" பாடல் பாலிவுட் ரசிகர்களின் எவர்க்ரீன் ஃபேவரைட் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன ரோல்
31 வருஷத்துக்கு முன்னாடி ஹீரோயினாக நடித்த ரேவதி சல்மான் கானின் அம்மா ரோலில் எல்லாம் நடிக்கவில்லை. டைகர் மற்றும் டைகர் 2 படங்களில் கிரிஷ் கர்னாட் நடித்து வந்த RAW தலைமை அதிகாரி கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறார். கிரிஷ் கர்னாட் மறைந்த நிலையில், அந்த கதாபாத்திரத்திற்கு ஜேம்ஸ் பாண்ட் படங்களின் வரும் எம் கதாபாத்திரம் போல ஒரு பெண் கதாபாத்திரத்தை இயக்குநர் உருவாக்கிய நிலையில், ரேவதியை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளனர்.

படம் இயக்கும் ரேவதி
நடிகை ரேவதி ஆங்கிலம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் சில படங்களை இயக்கி உள்ள நிலையில், தற்போது இந்தியில் மீண்டும் சலாம் வெங்கி எனும் படத்தை இயக்கி வருகிறார். விரைவில் அந்த படம் நிறைவடைந்து திரைக்கு வரவுள்ள நிலையில், சல்மான் கானின் டைகர் 3 படத்திலும் சூப்பரான ரோலில் கலக்க காத்திருக்கிறார் ரேவதி.

ஏகப்பட்ட படங்கள்
இந்த ஆண்டு பூதகாலம் மற்றும் வாரியர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் ரேவதி. முன்னதாக ஓடிடியில் வெளியான நவரசா வெப்சீரிஸிலும் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஜோதிகாவின் ஜாக்பாட் படத்தில் காமெடி ரோலில் கலக்கிய ரேவதி தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் நடித்து ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

ஹிட் கிடைக்குமா
கடந்த ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் ராதே படத்தில் நடித்த சல்மான் கானுக்கு அந்த படம் பெரிய ஃபிளாப் ஆக மாறியது. அதன் பின்னர் வெளியான ஆண்டிம் படமும் ஓடவில்லை. சமீபத்தில் சிரஞ்சீவி உடன் இணைந்து மோகன் ராஜா இயக்கத்தில் நடித்த காட்ஃபாதர் படமும் காலை வாரி விட்டது. இந்நிலையில், டைகர் 3 படத்தைத் தான் பெரிதும் நம்பி இருக்கிறார் சல்மான் கான்.