அந்த நடிகர் தன் மகளுக்காவது பாலியல் தொல்லை கொடுக்காமல் இருப்பாரா?: விளாசிய நடிகை

By Siva

திருவனந்தபுரம்: பிரபல நடிகர் சித்திக் மீது நடிகை ரேவதி சம்பத் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்ததை அடுத்து பல நடிகைகள் மீ டூ என்று கூறி வருகிறார்கள். தற்போது அந்த பட்டியலில் மலையாள நடிகை ரேவதி சம்பத் சேர்ந்துள்ளார்.

Revathy Sampath says Me too

அவர் பிரபல மலையாள நடிகர் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். 2016ம் ஆண்டு சித்திக் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக ரேவதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

21 வயதில் நடந்த அந்த சம்பவத்தின் பாதிப்பு தனக்கு இன்னும் நினைவில் உள்ளது என்று தெரிவித்த ரேவதி, சித்திக்கிடம் அவரின் மகள் பாதுகாப்பாக தான் உள்ளாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

எனக்கு நடந்தது போன்று உங்களின் மகளுக்கு நடந்தால் என்ன செய்வீர்கள் சித்திக் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மலையாள திரையுலகில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உருவாக்கப்பட்ட டபுள்யூசிசி அமைப்பை சித்திக் விமர்சித்த வீடியோவையும் ரேவதி வெளியிட்டுள்ளார்.

ரேவதியின் ஃபேஸ்புக் போஸ்ட்டை பார்த்த நெட்டிசன்களோ அவர் விளம்பரம் தேட இப்படி கீழ்த்தரமாக சித்திக் மீது புகார் தெரிவிப்பதாக விளாசியுள்ளனர். மீ டூ என்று சொல்லும் பெண்கள் அதிகம் விளாசப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X