இவனை கட்டி வைங்கப்பா.. கடுப்பில் வாட்டர்மெலன் திவாகரை விளாசிய பிரபலம்.. பஞ்சாயத்து ஸ்டார்ட்!

சென்னை: சமூக வலைதள பிரபலம், பிக்பாஸ் பிரபலம், ரீல்ஸ் பிரபலம் என வலம் வருபவர் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர். சமூக வலைதளங்கள் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமான இவர், இப்போது சினிமாக்களிலும் நடித்து வருகிறார். இது ஒரு புறம் இருக்க இவரது சமீபத்திய பேட்டி பலருக்கும் ஷாக் மேல் ஷாக் கொடுத்துள்ளது. இந்நிலையில் விமர்சகரும் நடிகருமான பிரசாந்த் ரங்கசாமி திவாகரின் பேட்டி வீடியோவைப் பகிர்ந்து இவனை கட்டி வைங்கப்பா என்று பதிவிட்டுள்ளார்.

திவாகர் பொதுவாகவே தன்னை யாராவது பேட்டி எடுக்க வந்தாலே, நான் கர்ணன் பட சிவாஜி மாதிரி நடிக்கிறேன், 3 படம் தனுஷ் மாதிரி நடிக்கிறேன், அந்த பாடலுக்கு ரியாக்ட் செய்கிறேன் என்று செய்து கொண்டு இருப்பார். இது எல்லாம் ஒரு புறம் இருந்தாலும், தான் தான் சிறந்த நடிகர் என்றும் தனது வளர்ச்சியை பார்த்து பலரும் பொறாமைப்படுகிறார்கள் என்றும், தனது வளர்ச்சியை முடக்கப் பார்க்கிறார்கள் என்றும் கூறிவருகிறார்.

Reviewer Prasanth Rangasamy Slams Watermelon Star Diwakar at X Page
Photo Credit:

த்ரிஷா மாதிரி பெண் வேண்டும்: இதுமட்டும் இல்லாமல், தனது நடிப்புத் திறமை என்பது இயற்கையாகவே இருப்பதாகவும், அதனால் இப்படி எல்லாம் நடிக்க முடிகிறது என்றும் தெரிவித்தும் வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் சிம்பு மாதிரி நடித்துக் காட்டவா என்று பேட்டியிலேயே நடித்துக் காட்டினார். இது மட்டும் இல்லாமல் தனக்கு பெண் பார்த்து வருகிறார்கள் என்றும், த்ரிஷா மாதிரியோ, சமந்தா மாதிரியோ, பெண் அமைந்தால் திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறேன் என்றும் தமன்னாவும் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

விளாசிய பிரசாந்த் ரங்கசாமி: இவர் சிம்பு போல நடித்துக் காட்டுகிறேன் என்று நடித்துக் காட்டிய வீடியோவை பகிர்ந்த விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி இவனை கட்டி வைங்கப்பா என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவுக்கு ரசிகர் ஒருவர், திவாகருக்கு இருக்கும் நம்பிக்கை எனக்கு இருந்தால் இங்கு நான் தான் ராஜா என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவரோ திவாகர் ஒரு அட்டென்ஷன் சீக்கர், எனவே அவரை அவாய்ட் செய்யவும் என்றும் கமெண்ட் போட்டுள்ளார். இவரது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இவரது இந்த பதிவுக்கு வாட்டர்மெலன் திவாகர் எப்படியும் பதிலடி கொடுக்கிறேன் என்று ஏதாவது வம்புக்கு இழுப்பார், இதனால் புது பஞ்சாயத்து ஸ்டார்ட் ஆகவுள்ளது என்று பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X