»   »  இனி படம் ரிலீஸாகி மூன்று நாள் கழித்துதான் விமர்சனம் போட வேண்டும்! - விஷால் புது 'உத்தரவு'

இனி படம் ரிலீஸாகி மூன்று நாள் கழித்துதான் விமர்சனம் போட வேண்டும்! - விஷால் புது 'உத்தரவு'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா விமர்சகர்கள் விமர்சனங்களை படம் வெளியாகி மூன்று நாள் கழித்துதான் வெளியிட வேண்டும். மக்கள் படம் பார்த்து முடிவு செய்யட்டும் என்று நடிகரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் கூறியுள்ளார்.

'நெருப்புடா' திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் சிவாஜியின் வீடான அன்னை இல்லத்தில் இன்று நடைபெற்றது.

Reviews should be come after 3 days of a movie release, says Vishal

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். இந்த விழாவில், நடிகர்கள் பிரபு, விஷால், லாரன்ஸ், தனுஷ், சத்யராஜ், இயக்குநர் விக்ரமன், ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய நடிகர் விஷால், "ஒரு திரைப்படம் வெளியாகி மூன்று நாள்களுக்கு, எந்த ஊடகமும் விமர்சனங்கள் வெளியிடக்கூடாது. ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகும் விமர்சனங்களால் தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினருக்கு இழப்பு ஏற்படுகிறது. மூன்று நாட்களுக்குப் பிறகுதான் விமர்சனம் வெளியிட வேண்டும். படம் வெளியான அன்றே விமர்சிக்கும் சமூக வலைத் தளங்களை ஒழுங்குப்படுத்த வேண்டும். மக்களை படம் பார்க்க விடுங்கள். அவர்கள் பார்த்து முடிவு சொல்லட்டும்," என்றார்.

English summary
Actor Vishal says that critics should release their reviews of a movie after 3 days of the release of the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil