ஜனநாயகன் பார்க்குறதுக்கு முன்னாடியே ஜூரம் வந்துடுச்சா.. மீண்டும் சென்சார் சிக்கல்.. ரொம்ப மோசம்!
சென்னை: விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தை இன்று ரிவைசிங் கமிட்டி உறுப்பினர்கள் பார்வையிட இருந்த நிலையில், சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இன்று ஜன நாயகன் படத்தை ரிவைசிங் கமிட்டி பார்க்கப் போவதில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
கேவிஎன் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் ஜனவரி 9ம் தேதியே வெளியாக வேண்டியது. ஆனால், சென்சார் பிரச்னை காரணமாக அந்த படம் இன்னமும் வெளியாகவில்லை. மார்ச் 9ம் தேதியான இன்று படத்தை பார்த்து சான்றிதழ் வழங்கினால் கூட மார்ச் 19ம் தேதி துரந்தர் 2 படத்துக்கு எதிராக ஜன நாயகன் படம் வெளியாகும் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், ஜன நாயகன் படத்தை பார்த்து சென்சார் கொடுக்க வேண்டிய மறுதணிக்கை குழுவினர் இன்று ஜன நாயகன் படத்தை பார்க்க முடியாது என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இழுத்தடிப்பு: தேர்தலுக்கு முன்னதாக ஜன நாயகன் படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்துவிட வேண்டும் என டிசம்பர் மாதத்தில் இருந்தே சென்சார் சான்றிதழுக்காக ஜன நாயகன் படக்குழு போராடி வருகிறது. ஆனால், தேர்தல் முடியும் வரை படத்தை வெளியிட்டு விடக் கூடாது என சில சதிகள் நடைபெற்று வரும் நிலையில் தான் இன்னமும் படத்துக்கு சென்சார் வழங்கப்படாமல் இழுத்தடித்து வருவதாக கூறுகின்றனர். கேரளா ஸ்டோரி 2 படத்துக்கு நீதிமன்றம் இடைக்கால தடையை விதித்தாலும் மேல்முறையீடு செய்து உடனடியாக அந்த படம் வெளியானது. ஆனால், படம் ஓடாமல் ஃபிளாப் ஆனது குறிப்பிடத்தக்கது.
வழக்கை வாபஸ் பெற்ற பின்னரும்: தணிக்கை குழு தங்களுக்கு நியாயமான முறையில் தணிக்கை சான்றை வழங்கவில்லை என்பதாலே வழக்கு தொடர்ந்தது கேவிஎன் நிறுவனம். ஆனால், வழக்கை வாபஸ் பெற்று இத்தனை நாட்கள் ஆன பின்னரும் ஜன நாயகன் படத்தை பார்த்து தணிக்கை சான்று வழங்காமல் இப்படி தள்ளிப்போவது நியாயமே கிடையாது என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
மார்ச் மாதம் வெளியாகுமா?: விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தை இன்று மதியம் மறுதணிக்கை குழு பார்த்து சான்றிதழ் வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் உள்ள சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், இன்று ஜன நாயகன் படத்தின் மறு தணிக்கை நடைபெறாது என தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்ததாக அவர்கள் எப்போது ஜன நாயகன் படத்தை பார்க்க நேரம் ஒதுக்குவார்கள் என்பதும் இந்த மாதத்துக்குள் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டு படம் ரிலீஸ் ஆகுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











