twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'மெரினா புரட்சி' ... மீண்டும் தடை விதித்தது மத்திய திரைப்பட தணிக்கைக் குழு!

    மெரினா புரட்சி படத்துக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    |

    Recommended Video

    மெரினா புரட்சி படத்திற்கு தடை- வீடியோ

    சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தைக் கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் மெரினா புரட்சி படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கைக் குழு தடை விதித்துள்ளது.

    2017ம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையமாகக் கொண்டு எம்.எஸ்.ராஜ், 'மெரினா புரட்சி' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் போராட்டக்களத்தில் எடுக்கப்பட்ட நிஜக் காட்சிகளும் வைக்கப்பட்டுள்ளது.

    Revising committee bans Marina puratchi

    இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர், எவ்வித காரணமும் சொல்லாமல், மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவின் பார்வைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடிகை கவுதமி தலைமையிலான குழுவினர் இப்படத்தை பார்த்தனர். ஆனால், அவர்களும் எவ்வித காரணமும் சொல்லாமல், படத்திற்கு மீண்டும் தடை விதித்துள்ளனர்.

    இந்தியன் சினிமோடோகிராப் சட்டம் 1983 (Indian Cinematograph Act 1983) விதியின்படி ரிவைசிங் கமிட்டி மறுப்பு தெரிவித்தால் எப்சிஏடி (FCAT) எனப்படும் டெல்லி டிரிப்யூனல் சென்று தணிக்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது வழக்கமான நடைமுறை. ஆனால் மெரினா புரட்சி படத்திற்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு செகண்ட் ரிவைசிங் கமிட்டிக்கு படம் அனுப்பப்பட்டிருக்கிறது.

    இதனால் அதிர்ச்சியடைந்த மெரினா புரட்சி படக்குழு, 'காரணமின்றி நிராகரிப்பதும் காலதாமதம் செய்வதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட விலங்குகள் நல அமைப்பின் கடிதம் தான் இந்த தடைக்கு காரணமாக இருக்குமோ எனும் ஐயம் எழுகிறது.

    தமிழர்களின் பெருமை மிகு அடையாளமான ஜல்லிக்கட்டு போராட்டத்தை உரத்த குரலில் சொல்லும் மெரினா புரட்சி படத்தை முடக்கும் அனைத்து சதிகளையும் முறியடிக்க நாச்சியாள் பிலிம்ஸ் குழுவினர் உறுதியுடன் இருக்கிறோம்' எனத் தெரிவித்துள்ளனர்.

    English summary
    The revising committe of CBFC have banned the Marina puratchi movie, which is based on Jallikattu protest directed by M.s.Raj.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X