Revolver Rita Day 3 Box Office - கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா 3வது நாள் வசூல்.. செம அடி விழுந்திருக்கு

சென்னை: ஜே.கே.சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா உள்ளிட்டோர் நடித்திருக்கும் ரிவால்வர் ரீட்டா திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. டார்க் காமெடி ஜானரை இயக்குநர் ட்ரை செய்திருந்தார். ஆனால் அது சுத்தமாக ஒர்க் அவுட் ஆகவில்லை. கீர்த்தி மற்றும் ராதிகாவின் நடிப்பு மட்டுமே ஆறுதலாக இருந்தது. இந்நிலையில் மூன்றாவது நாள் குறித்த விவரம் வெளியாகியிருக்கிறது.

விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் பழனிச்சாமி தயாரித்திருக்கும் படம் ரிவால்வர் ரீட்டா. இதனை ஜே.கே.சந்துரு என்பவர் இயக்கியிருக்கிறார். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும்வகையிலும் டார்க் காமெடி ஜானரிலும் இப்படத்தை உருவாக்கியிருந்தார் இயக்குநர். ஏற்கனவே மகாநடி, ரகுதாத்தா உள்ளிட்ட படங்களில் லீடு ரோலை ஏற்றிருந்ததால் ரொம்பவே நம்பிக்கையோடு இப்படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ்.

சுத்தமாக ஒர்க் அவுட் ஆகவில்லை: அந்த இரண்டு படங்களுமே நாயகிக்கு முக்கியத்தும் கொடுத்து எடுக்கப்பட்டதோடு மட்டுமின்றி கதை, திரைக்கதையில் பலமாக இருந்தன. ஆனால் இந்தப் படத்திலோ அது இல்லை. படம் ஆரம்பித்து எங்கெங்கோ சென்று; டார்க் காமெடி என்கிற பெயரில் எதை எதையோ செய்ததால்; படம் பார்த்த ரசிகர்கள் ரொம்பவே கடுப்பாகிவிட்டார்கள். ரசிகர்களிம் சுத்தமாக ஒர்க் அவுட் ஆகவில்லை.

Revolver Rita Day 3 Box Office Keerthy Suresh Film Struggles With Just 2 9 Crore
Photo Credit:

கீர்த்தி சுரேஷ், ராதிகா ப்ளாஸ்ட்: கதை, திரைக்கதை சொதப்ப; வசனங்கள், பின்னணி இசை, காமெடி காட்சிகளாவது ரசிகர்களுக்கு கனெக்ட் ஆகும் என்று பார்த்தால் அதுவும் இல்லை. இதனால் ரசிகர்கள் பொறுமையின் எல்லையை தாண்டி சோஷியல் மீடியாவில் படத்தை பலமாக அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். படத்துக்கு ஒரே ஆறுதல் என்றால் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகாவின் நடிப்பு மட்டும்தான்.

நிரூபித்த கீர்த்தி சுரேஷ்: தான் ஒரு தேசிய விருது வென்ற நடிகை என்பதை இந்தப் படத்திலும் பலமாக நிரூபித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். காமெடி சீன்களை எப்படியோ ஒப்பேற்றிய அவர் ஆக்‌ஷன் சீன்களில் கலக்கியிருந்தார். அவருக்கு பக்கபலமாக ராதிகா இருந்ததால் இந்த காம்போ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படம் வெளியாகி மூன்று நாட்களில் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்ற தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது.

வசூல் விவரம்: அதன்படி முதல் நாளில் தமிழில் 55 லட்சம், தெலுங்கில் இரண்டு லட்சம் வசூலித்து மொத்தம் 75 லட்சம் ரூபாயை மட்டுமே கலெக்ட் செய்திருந்தது. இரண்டாவது நாளிலும் 75 லட்சம் ரூபாயை வசூலித்த படம் மூன்றாவது நாளான நேற்று அதைவிட குறைவாக வெறும் 59 லட்சம் ரூபாயை மட்டுமே வசூலித்திருக்கிறதாம். ஆக மொத்தம் மூன்று நாட்களில் 2.9 கோடி ரூபாயைத்தான் படம் வசூலித்திருப்பதாக சாக்நில்க் இணையதளம் கூறியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X