Revolver Rita X Review - கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா.. படம் எப்படி இருக்கு?.. எக்ஸ் விமர்சனம் இதுதான்
சென்னை: கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஜே.கே.சந்துரு இயக்கத்தில் உருவாகியிருக்கும் ரிவால்வர் ரீட்டா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. நேற்று பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்ட சூழலில்; படம் பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கின்றார்கள். அதன்படி படத்துக்கு ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்கள் வர தொடங்கியிருக்கின்றன.
கோலிவுட், டோலிவுட்டில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆண்டனி தட்டிலை கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்பும் நடிப்பில் தீவிர கவனம் செலுத்திவரும் அவர் இப்போது ரிவால்வர் ரீட்டா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் ராதிகா, சென்ராயன் உள்ளிட்டோர் முக்கியமான ரோலை ஏற்க; ஜே.கே.சந்துரு என்பவர் இயக்கியிருக்கிறார்.
இன்று ரிலீஸ்: கீர்த்தி ஹிட் கொடுத்து நீண்ட காலம் ஆகிவிட்டது. எனவே இந்தப் படத்தை ஹிட் படமாக கொடுத்து மார்க்கெட்டில் தன்னை தக்க வைக்க கடுமையாக இப்படத்தில் உழைத்திருக்கிறார். ஹீரோயின் ஒரியன்டட் சப்ஜெக்ட்டாக உருவாகியிருக்கும் இப்படமானது இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. முன்னதாக நேற்று பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. படம் பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுவருகின்றனர்.

கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஃபெர்பார்மன்ஸ்: படம் பார்த்த இந்த ரசிகர், "கீர்த்தி சுரேஷ் தனது கரியர் பெஸ்ட் ஃபெர்ஃபார்மன்ஸை இதில் கொடுத்திருக்கிறார். காமெடி டைமிங்கும் நன்றாக இருக்கிறது. இந்தப் படத்தை உறுதியோடு ஏற்றுக்கொண்டு பல வேரியஷன்களில் நடிப்பை கொடுத்திருக்கிறார். நடிகையாக இன்னும் வளர்ந்துவிட்டார். அவரது ஃபெர்ஃபார்ம் நன்றாக மட்டுமின்றி லைவாகவும் இருந்தது" என்று புகழ்ந்திருக்கிறார்.
நல்ல டார்க் காமெடி: இந்த ரசிகர், 'ரிவால்வர் ரீட்டா நல்ல டார்க் காமெடி படம். காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. கீர்த்தி சுரேஷ்தான் இந்தப் படத்தை தனது தோள்களில் தாங்கியிருக்கிறார். அவர் இன்னொருமுறை தனது நடிப்பை நிரூபித்திருக்கிறார். ராதிகாவின் காமெடி டைமிங்கும் அருமையாக இருக்கிறார். சூப்பர் சுப்பராயன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லியும் படத்துக்கு பலமாக இருக்கிறார்கள். இயக்குநர் சந்துரு க்ளீனான காமெடியுடன் படத்தை உருவாக்கியிருக்கிறார்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கீர்த்திதான் எல்லாமே: அதேபோல் இவர், "கீர்த்தி சுரேஷ் ஒட்டுமொத்தமாக தனதாக்கிக்கொண்டார். முழுக்க முழுக்க இது கீர்த்தியின் ஷோதான்" என்று கூறியிருக்கிறார்.
அவரைத் தொடர்ந்து இன்னொருவர், "ரிவால்வர் ரீட்டா ஒரே நாளில் நடக்கும் டார்க் காமெடி ஜானர் மற்றும் த்ரில்லர் படம். ஒட்டுமொத்த படத்தையும் கீர்த்தி சுரேஷ் தாங்கியிருக்கிறார். ராதிகா நன்றாகவே சப்போர்ட் செய்திருக்கிறார். அவர் செய்யும் ஒரு காமெடிகள் எல்லாம் அருமை. இந்தப் படம் ஒரு வித்தியாசமான முயற்சி" என்று புகழ்ந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











