twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரீவைன்ட்... இதுதான் ரஜினி போட்ட முதல் பாலிடிக்ஸ் பட்டாசு...

    By
    |

    சென்னை: அரசியல் கட்சித் தொடங்குவதாக அறிவித்துவிட்டார் ரஜினி. அதற்கான வேலைகள் அமர்க்களமாக நடந்துவருகிறது என்கிறார்கள்.

    தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்த ரஜினியை அரசியல் பேச வைத்த நிகழ்வு, 1995 ஆம் ஆண்டு நடந்தது. அது சூப்பர் ஹிட்டான 'பாட்ஷா' படத்தின் வெற்றி விழா. சரியாகச் சொன்னால், அந்த தேதி 14.07.1995. தமிழகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களால் கொதித்த ரஜினி பரபரப்பாகப் பேசினார், அந்த விழாவில். அந்தப் பேச்சு மக்களின் குரலாக ஒலிக்கப்பட்டது எனக் கூறப்பட்டது அப்போது. அந்தப் பேச்சு இங்கே... சும்மா ரீவைன்ட்....

    ''சமீபத்தில் மணிரத்னம் வீட்டின் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த சம்பவம் என் மனதுக்கு ரொம்ப கஷ்டத்தைக் கொடுத்துவிட்டது. அடுத்தடுத்து தமிழகத்தில் வெடிகுண்டுகள் வெடிக்கின்றன. அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். பேப்பரில் இப்படி தினமும் செய்தி வந்துகொண்டே இருக்கிறது.

    சுடுகாடு

    சுடுகாடு

    தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் அதிகமாகிவிட்டது. இதற்கு உடனே முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும். தமிழக அரசுக்கும் முதலமைச்சருக்கும் இதை வேண்டுகோளாகச் சொல்கிறேன். இந்த வெடிகுண்டு சம்பவங்களுக்கு உடனே முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்.

    தூக்கு

    தூக்கு

    சிங்கப்பூர் போன்ற நாடுகளில் போதை மருந்து வைத்திருந்தாலே தூக்கில் போடுகிறார்கள். அதைப் போல இங்கேயும் துப்பாக்கியால் சுடுபவர்கள், வெடிமருந்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் ஆதாரத்தோடு சிக்கினால் விசாரணையின்றித் தூக்கில் போட்டால் போதும், எல்லாம் சரியாகிவிடும். அப்பாவி மக்கள், பாமர மக்கள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

    பஞ்சாப்

    பஞ்சாப்

    பஞ்சாப் மாநிலம் இதற்கு முன் எப்படி இருந்தது. தீவிரவாதிகளின் வெறி யாட்டம் எவ்வளவு இருந்தது? போலீஸ் அதிகாரி கில் கையில் முழு அதிகாரம் கொடுக்கப்பட்டது. இப்போது தீவிரவாதிகள் அடக்கப்பட்டு, அங்கு மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்.

    சீரியஸ்

    சீரியஸ்

    நம்ம போலீஸ் யாருக்கும் கம்மி இல்லை. அவசர சட்டம் போட்டு போலீசுக்கு முழு அதிகாரம் தந்தால்தான் வெடிகுண்டு கலாசாரம் ஒழியும். தமிழகம் நலம் பெறும். நான் இதை தமிழ்நாட்டின் குடிமகன் என்ற முறையில் சீரியசாகவே சொல்கிறேன்.

    - இதுதான் பரபரப்பைக் கிளப்பிய, ரஜினியின் அந்தப் பேச்சு.

    English summary
    This is the Rajinikanth's sensation speech at Baasha movie function in 1995
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X