twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா நெக்ஸ்ட்.. சரக்கு ஃபர்ஸ்ட்.. முதல்வர்களுக்கு இப்படியொரு கோரிக்கை வைத்த சர்ச்சை இயக்குநர்!

    |

    ஹைதராபாத்: தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா, மதுவை அத்தியாவாசிய பட்டியலில் சேர்க்க வேண்டும் என ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதல்வர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

    கொரோனா கலவரத்தால் உலகமே நடுங்கிக் கிடக்கும் நிலையிலும், தனது தேவையை மட்டுமே ராம் கோபால் வர்மா எதிர்பார்ப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    அவரது ட்வீட்டுக்கு கீழே, நெட்டிசன்கள் ஏன் இப்படி இந்த நேரத்திலும் அல்ப்பத் தனமாக இருக்கிறீர்கள் என்றும், குடிமகன்களின் ஃபீலிங்ஸை அப்படியே பதிவிட்டதற்கு நன்றி என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

    பாயும் கொரோனாவால் நோயாய் குலைந்த சினிமா.. தீபாவளிக்குத் தள்ளிப் போகிறதா விஜய்யின் மாஸ்டர் ரிலீஸ்?பாயும் கொரோனாவால் நோயாய் குலைந்த சினிமா.. தீபாவளிக்குத் தள்ளிப் போகிறதா விஜய்யின் மாஸ்டர் ரிலீஸ்?

    மம்தாவை போல

    மம்தாவை போல

    மதுவுக்கு அடிமையாகி இருக்கும் குடிமகன்கள், திடீரென மது கிடைக்காமல், பைத்தியம் பிடித்தது போல மாறி வருகின்றனர். மேலும், கள்ளச்சாரய பிரச்சனைகளும் தலை தூக்கத் தொடங்கி இருக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு வீட்டுக்கு வீடு மது விற்பனை செய்யப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்ததாக வெளியான செய்தியை மேற்கோள் காட்டி ராம் கோபால் கோரிக்கை வைத்துள்ளார்.

    இரு மாநில முதல்வர்களுக்கும்

    ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோரை குறிப்பிட்டு, மம்தா பானர்ஜியை போல பரந்த மனதுடன், குடிமகன்களின் கோரிக்கையை பரிசீலனை செய்யுமாறு இயக்குநர் ராம் கோபால் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். மேலும், மது கிடைக்காமல் ஏற்படும் பிரச்சனைகளையும் பட்டியலிட்டுள்ளார்.

    ஃபேக் நியூஸ்

    அந்த செய்தியை நன்றாக படியுங்கள் ராம் கோபால் வர்மா, அது முற்றிலும் ஃபேக் நியூஸ் என்றும், உங்களை போன்ற ஆட்களால், இந்த நேரத்திலும், எப்படி சுயநலத்துடனே சிந்திக்க முடிகிறது. அடுத்த வேளை உணவு இன்றி தவிக்கும் மக்கள் பலர் இருக்க, உங்களுக்கு சரக்கு ஒரு கேடா? என பல நெட்டிசன்கள் விளாசி தள்ளியுள்ளனர்.

    அவரு கடவுள்

    சரக்கு கிடைக்காமல் அல்லாடும் குடிமகன்களுக்கு சாலையில் செல்லும் ஒருவர், மதுவை தானமாக வழங்கும் வீடியோவை ஒரு நெட்டிசன் பதிவிட்டு, ராம் கோபால் வர்மாவை வெறுப்பேற்றியுள்ளார். அந்த வீடியோவை பார்த்த இன்னொரு நெட்டிசன், அவரு கடவுள் என சரக்கை தானம் செய்தவரை பாராட்டியுள்ளார்.

    நீங்க பிரதமரா இருந்தா

    அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் மதுவையும் சேர்க்க வேண்டும் என இரு மாநில முதல்வர்களுக்கும் நேரடியாக கோரிக்கை வைத்த இயக்குநர் ராம் கோபால் வர்மாவின், நல்ல எண்ணத்தை பாராட்டி, நீங்க மட்டும் நாட்டின் பிரதமரா இருந்தா, எந்த ஒரு குடிமகனுக்கும் எந்த ஒரு குறையும் இருக்காது என இந்த நெட்டிசன் கலாய்த்துள்ளார்.

    கே.டி.ஆர் பதில்

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரின் ஸ்போக்ஸ்பெர்சன் கே.டி.ஆர்., ராம் கோபால் வர்மாவின் இந்த ட்வீட்டுக்கு செம பதில் அளித்துள்ளார். நீங்க, முடி வெட்டுவதை பற்றித் தானே கேக்குறீங்க, நிச்சயம் அது குறித்து பரிசீலனை செய்கிறேன் என்று பதிலடி கொடுத்துள்ளார். சரக்கடிக்காமல் பல பேர் தலை முடியை பிய்த்துக் கொள்கின்றனர் என ராம் கோபால் வர்மா தனது ட்வீட்டில் குறிப்பிட்டது அவருக்கே ஆப்பாக முடிந்தது.

    English summary
    While the whole world is dealing with the novel coronavirus pandemic and doing their best to avoid getting infected, director Ram Gopal Varma (RGV) seems to have other issues concerning him.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X