என்டிஆர் காட்சிகள் 'கட்'-ராம்கோபால் வர்மா அதிரடி

By Sudha

Surya
என்டி ராமாராவ் தொடர்பான காட்சிகள் நீக்கம்... ராம்கோபால் வர்மா தடாலடி!

ரக்த சரித்ரா படத்துக்கு கிளம்பிய எதிர்ப்பைத் தொடர்ந்து, அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த என்டி ராமராவ் தொடர்பான காட்சிகள் அனைத்தையும் நீக்கிவிட்டார் இயக்குநர் ராம்கோபால் வர்மா.

சத்ருகன் சின்ஹா, விவேக் ஓபராய், ப்ரியாமணி நடித்து, நேற்று வெளியான படம் ரக்த சரித்ரா. இந்தப் படத்தில் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி நிறுவனருமான என்டி ராமாராவ் தொடர்பான காட்சிகள் அவரை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி ஆந்திராவில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர் தெலுங்கு தேசம் கட்சியினர்.

ராமாராவின் மனைவி லட்சுமி பார்வதியும் இந்த காட்சிகளை நீக்கக் கோரியிருந்தார்.

பல திரையரங்குகளில் படத்தை ஓடவிடாமல் நிறுத்தினர் தெலுங்கு தேசத் தொண்டர்கள். இந்த நிலையில், ரக்த சரித்திராவில் இடம்பெற்ற என்டி ராமாராவ் தொடர்பான காட்சிகளை நீக்கிவிடுவதாக அறிவித்திருந்தார் ராம் கோபால் வர்மா.

தெலுங்கு தேசத்தினரின் போராட்டத்தையடுத்து, ராமாராவ் தொடர்பான அனைத்துக் காட்சிகளையும் நீக்கிவிட்டதாக இப்போது அறிவித்துள்ளார்.

அடுத்த காட்சியிலிருந்து எடிட் செய்யப்பட்ட ரக்த சரித்ரா திரையிடப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X