சர்ச்சை இயக்குநர் எனக்கு ஆபாச வீடியோ அனுப்பினார்: வில்லங்க நடிகை புகார்

By Siva

மும்பை: இயக்குநர் தன்னை ஏ படத்தில் நடிக்க அழைத்ததுடன் ஆபாச வீடியோ அனுப்பி வைத்ததாக தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகை ஷெர்லின் ஷோப்ரா.

ஜீவன், கஜாலா நடித்த யுனிவர்சிட்டி படம் மூலம் கோலிவுட் வந்தவர் பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா. காம்சூத்ரா 3டி படத்தில் நிர்வாண காட்சிகளில் துணிந்து நடித்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தவர். அவரின் இன்ஸ்டாகிராம் பக்கம் போனால் ஒரே அரை நிர்வாண புகைப்படங்களாக உள்ளது.

இந்நிலையில் ஷெர்லின் சர்ச்சைக்கு பெயர் போன இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது புகார் தெரிவித்துள்ளார். ராம் கோபால் வர்மா பற்றி ஷெர்லின் கூறியிருப்பதாவது,

ராம் கோபால் வர்மா

ராம் கோபால் வர்மா

2016ம் ஆண்டு நான் பட வாய்ப்பு கேட்டு என் புகைப்படங்களை ராம் கோபால் வர்மாவுக்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்பினேன். இது ஷெர்லின் சோப்ரா. உங்களின் படங்களில் நடிக்க ஆவலாக உள்ளேன். உங்களின் ரங்கீலா, சத்யா உள்ளிட்ட படங்களை பார்த்து ரசித்துள்ளேன் என்று வாட்ஸ்ஆப் செய்தேன். உடனே அவர் பதில் அனுப்பினார். இது தான் என் ஸ்க்ரிப்ட், படித்துப் பார்த்துவிட்டு கருத்து தெரிவிக்கவும் என்று பதில் அனுப்பினார்.

கதை

கதை

ஸ்க்ரிப்ட்டை படித்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம் அதில் கதையே இல்லை. இதையடுத்து சார், நீங்கள் அனுப்பிய ஸ்க்ரிப்ட்டில் கதையே இல்லை வெறும் செக்ஸ் காட்சிகள் தான் உள்ளன. தயவு செய்து கதை என்னவென்பதை தெரிவிக்க முடியுமா என்று கேட்டு நான் பதில் அனுப்பினேன். அதற்கு ராம் கோபால் வர்மா, இது தான் ஸ்க்ரிப்ட் என்றார். அது எப்படி கதை இல்லாமல் என்று நான் மீண்டும் கேட்க அவரோ, உங்களுக்கு சவுகரியமாக இருந்தால் கூறுங்கள், படம் பண்ணலாம் என்றார்.

ஆபாச வீடியோ

ஆபாச வீடியோ

ராம் கோபால் வர்மா எனக்கு ஆபாச வீடியோ ஒன்றை அனுப்பி வைத்தார். அதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்து என்ன சார், இப்படி ஒரு வீடியோவை அனுப்பியிருக்கிறீர்களே என்று கேட்டதற்கு செக்ஸ் என்பது அடிப்படை தேவை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று இப்படி செய்தேன். மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் செக்ஸ் தேவை, அதை அனுபவிக்க வேண்டும் என்று பதில் அனுப்பினார் என ஷெர்லின் தெரிவித்தார்.

வற்புறுத்தல்

வற்புறுத்தல்

ராம் கோபால் வர்மா அசிங்கமாக நடந்து கொண்டால் அவர் மீது ஏன் சைபர் குற்றப்பிரிவில் புகார் தெரிவிக்கவில்லை என்று ஷெர்லினிடம் கேட்கப்பட்டது. அதற்கு ஷெர்லினோ, ராம் கோபால் வர்மா என்னை அவர் படத்தில் நடிக்க கட்டாயப்படுத்தவில்லை என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X