twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2018ல் நடந்த ஆணவக் கொலையை படமாக்கும் சர்ச்சை இயக்குநர்.. திட்டித் தீர்க்கும் பாதிக்கப்பட்ட குடும்பம்

    |

    ஹைதராபாத்: ஆபாச பட நடிகை மியா மல்கோவாவை வைத்து க்ளைமேக்ஸ் படத்தை எடுத்து சர்ச்சையை கிளப்பிய ராம் கோபால் வர்மா, அடுத்த சர்ச்சைக்கு தயாராகி விட்டார்.

    Recommended Video

    உண்மை சம்பவத்தை படமாக்கும் ராம் கோபால் வர்மா | Pranav இழப்பு

    2018ம் ஆண்டு நடைபெற்ற ஆணவக் கொலையை MURDER எனும் பெயரில் படமாக்கி உள்ளார்.

    அதன் போஸ்டர்கள் வெளியாகி உள்ள நிலையில், அதுகுறித்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

    ஆபாச கமென்ட்.. சைபர்கிரைம் போலீஸ் முன் நெட்டிசனை விளாசிய பிரபல நடிகை.. என்ன செய்தார் பாருங்க! ஆபாச கமென்ட்.. சைபர்கிரைம் போலீஸ் முன் நெட்டிசனை விளாசிய பிரபல நடிகை.. என்ன செய்தார் பாருங்க!

    சர்ச்சை இயக்குநர்

    சர்ச்சை இயக்குநர்

    நாகார்ஜுனா நடிப்பில் 1989ம் ஆண்டு வெளியான சிவா படத்தின் மூலம் இயக்குநர் ஆனவர் ராம் கோபால் வர்மா. சூர்யாவின் ரத்த சரித்திரம், லக்‌ஷ்மி என்.டி.ஆர்., காட் செக்ஸ் அண்ட் ட்ரூத் உள்ளிட்ட பல சர்ச்சைக்குரிய படங்களை இயக்கி உள்ள அவர், சமீபத்தில், க்ளைமேக்ஸ் மற்றும் நேக்கட் உள்ளிட்ட ஆபாச படங்களை இயக்கி சர்ச்சையில் சிக்கி இருந்தார்.

    ஆபாச படம்

    ஆபாச படம்

    ஆபாச பட நடிகை மியா மல்கோவாவை வைத்து, க்ளைமேக்ஸ் எனும் ஆபாச படத்தை இயக்கி சமூக வலைதளங்களில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருந்தார் ராம் கோபால் வர்மா. அந்த படத்தைத் தொடர்ந்து நேக்கட் நங்கா நக்னம் படத்தையும் இயக்கி வருகிறார். சமீபத்தில் வெளியான அந்த படத்தின் ஆபாச ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகின.

    கரண் ஜோஹருக்கு ஆதரவு

    கரண் ஜோஹருக்கு ஆதரவு

    சமூக வலைதளங்களில் சர்ச்சை கருத்துக்களை கூறி வரும் இயக்குநர் ராம் கோபால் வர்மா, சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் கொதித்தெழுத்து, கரண் ஜோஹர் மீதும் சல்மான் கான் மீதும் நெபோடிசத்தையும் விளாசி வந்த நிலையில், கரண் ஜோஹருக்கும் நெபோடிசத்துக்கும் ஆதரவாக கருத்து வெளியிட்டு வாங்கிக் கட்டிக் கொண்டார் ராம் கோபால் வர்மா.

    மிர்யால்குடா கொலை வழக்கு

    மிர்யால்குடா கொலை வழக்கு

    கடந்த 2018ம் ஆண்டு, வேறு சாதி பையனை தனது மகள் அமுத வர்ஷினி திருமணம் செய்து கொண்டதை தாங்க முடியாமல், அந்த பெண்ணின் தந்தை மாருதி ராவ், 24 வயதே ஆன மகளின் கணவன் பிரனாய் என்பவரை கடத்திக் கொன்ற சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இரு முறை கைது செய்யப்பட்ட பின்னர், அந்த பெண்ணின் தந்தை மாருதி ராவ், கடந்த மார்ச் மாதம் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார்.

    கையில் எடுத்த ஆர்ஜிவி

    கையில் எடுத்த ஆர்ஜிவி

    இந்நிலையில், அந்த கதையை தற்போது MURDER எனும் தலைப்பில் படமாக்கப் போவதாக அடுத்த சர்ச்சையை, புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு கிளப்பியுள்ளார் ராம் கோபால் வர்மா. அந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள், உங்களுக்கு வேறு வேலையே இல்லையா, பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் சோகத்தை காசாக மாற்ற நினைக்கிறீர்களே என நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

    சபிக்கும் குடும்பம்

    சபிக்கும் குடும்பம்

    அமுத வர்ஷினி இந்த துயரத்தில் இருந்து மீண்டு வர பெரும் போராட்டம் நிகழ்த்தி வரும் நிலையில், கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல், எங்களுக்கு எந்தவொரு அறிவிப்பும் சொல்லாமல், இப்படியொரு இழிவான செயலை ராம் கோபால் வர்மா செய்கிறார். அம்ருதா எழுதாத ஒரு கடிதத்தை அவர், எழுதியது போல அண்மையில் ராம் கோபால் வர்மா வைரலாக்கியதையும் பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.

    வழக்கு

    வழக்கு

    ஆனால், இது தொடர்பாக, தாங்கள் எந்த ஒரு வழக்கையும் போடப்போவதில்லை என்றும், அது தான் ராம் கோபால் வர்மாவுக்கு மிகப்பெரிய விளம்பரமாக இருக்கும் என்றும் அமுத வர்ஷினி மற்றும் அவர் குடும்பத்தினர் கூறியுள்ளனர். மர்டர் படத்திற்கு எழுந்த எதிர்ப்புகளால் பல டிவீட்கள் மூலம் பதில் அளித்து வருகிறார் ராம் கோபால் வர்மா.

    எனக்கும் தெரியும்

    எனக்கும் தெரியும்

    ஒரு பெண்ணின் வலி என்ன என்பது தனக்கும் தெரியும் என்றும், ஆணவக் கொலை எழுவதன் காரணம் மற்றும் தனது மகள் மீது தந்தை வைத்த பாசம் உள்ளிட்ட உண்மைகளை சொல்லவே இந்த படத்தை எடுக்கப் போவதாக பதில் அளித்து வருகிறார். ஆனால், தெலுங்கு சினிமா ரசிகர்கள் ராம் கோபால் வர்மா இந்த படத்தை கைவிட வேண்டும் என்றே விளாசி வருகின்றனர்.

    English summary
    Filmmaker Ram Gopal Varma courted controversy yet again, when he released the poster of his upcoming film Murder. The film is apparently based on the infamous 2018 Miryalguda murder case
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X