twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆமா, சென்னையில் மழையை நிறுத்த ரஜினி ஏன் எதுவுமே செய்யவில்லை: ராம் கோபால் வர்மா கிண்டல்

    By Siva
    |

    சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு ரூ.5 முதல் 10 லட்சம் நிவாரண நிதி அளித்துள்ள சூப்பர் ஸ்டார்களை இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார்.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு திரையுலக பிரபலங்கள் நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் இயக்குனர் ராம் கோபால் வர்மா சென்னை வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.5 முதல் 10 லட்சம் நிதி அளித்துள்ள சூப்பர்ஸ்டார்களை கிண்டல் செய்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரூ.10 லட்சம் அளித்துள்ளதை பலரும் ஒரு மாதிரியாக பார்க்கையில் ராம் கோபால் வர்மா இவ்வாறு கிண்டலடித்துள்ளார்.

    இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

    சூப்பர் ஸ்டார்களே

    ஓமைகாட்! சூப்பர் ஸ்டார்கள் அளித்துள்ள ரூ.5 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் என்ற பெரிய தொகையை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் சென்னை மக்கள் குழம்பியுள்ளனர். இதற்கு அவர்கள் நன்கொடை அளிக்காமலேயே இருக்கலாம்.

    ரஜினிகாந்த்

    மழையை நிறுத்த ரஜினிகாந்த் ஏன் எதுவும் செய்யவில்லை என்று நான் வியக்கிறேன்.

    பணம்

    பிரபலங்கள் குவின்டால் கணக்கில் பிரார்த்தனையையும், டன் கணக்கில் அன்பையும் கொஞ்சம் பணத்தையும் அளிக்கிறார்க்ள். ஏன் என்றால் பிரார்த்தனை மற்றும் அன்பு மலிவானது.

    சுயநலவாதி

    நான் ஒரு ரூபாய் கூட நன்கொடை அளித்தது இல்லை. குவின்டால் கணக்கில் பிரார்த்தனை மற்றும் டன் கணக்கில் அன்பை அளிக்கும் பிரபலங்களுக்கு மத்தியில் நான் மிகவும் சுயநலவாதி.

    English summary
    Ram Gopal Varma, who mastered the art of attracting controversies with his blatant talks, has once again shocked everyone with his comments on 'Superstars'. While few were fuming on Tamil Superstar Rajinikanth for only donating 10 lakhs to the Tamil people, amidst the devastation caused by Chennai Rains, RGV's comments are now raising many eyebrows.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X