பார்ட்டியில் சிம்பு ஹீரோயினுடன் கெட்ட ஆட்டம் போட்ட பிரபல இயக்குநர்
Recommended Video
ஹைதராபாத்: ஐஸ்மார்ட் ஷங்கர் பட சக்சஸ் பார்ட்டியில் இயக்குநர் ராம் கோபால் வர்மா செய்த காரியத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ராம் போதினேனி, நபா நடேஷ், நிதி அகர்வால் உள்ளிட்டோர் நடித்த ஐஸ்மார்ட் ஷங்கர் தெலுங்கு படம் கடந்த 18ம் தேதி வெளியானது. படம் வெளியான 4 நாட்களில் ரூ. 48 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

படம் ரிலீஸான இரண்டு நாட்களில் ரூ. 25 கோடி வசூலித்த நிலையில் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. அந்த பார்ட்டியில் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா, ஐஸ்மார்ட் ஷங்கர் படத்தின் தயாரிப்பாளரான நடிகை சார்மி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பார்ட்டியில் ராம் கோபால் வர்மா பீரை எடுத்து தனது தலையில் ஊற்றிக் கொண்டு சார்மியை கட்டிப்பிடித்தார். அவர் கட்டிப்பிடித்து எசக்குபிசக்கான இடத்தில் முகத்தை வைக்க அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இத்தனை கூத்து நடந்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு தன்னைத் தானே கலாய்த்துக் கொண்டதே ராம் கோபால் வர்மா தான். அந்த வீடியோவை பார்த்தவர்கள் ஏமி ராம் கோபால் காரு சார்மியுடன் என்ன செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் ராம் கோபால் வர்மா சார்மிக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்த புகைப்படமும் வெளியாகியுள்ளது. ஐஸ்மார்ட் பார்ட்டி செமயாக நடந்திருக்கிறது போன்று. இப்படித் தான் பார்ட்டியில் ஆட்டம் போடுவீர்களா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஐஸ்மாட்ர் ஷங்கர் எல்லாம் ஒரு படமா, குப்பையில் போட வேண்டியது என்று விமர்சகர்கள் விளாசியுள்ளனர். ஆனாலர் ராம் கோபால் வர்மாவோ ஐஸ்மார்ட் ஷங்கரையும், பூரி ஜெகன்நாத்தையும் ஆஹா, ஓஹோ என்று பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications