ரஜினிகாந்தை வம்பிழுத்த ராம் கோபால் வர்மா.. அந்த நடிகர் தான் ரியல் சூப்பர் ஸ்டார் என பட்டம் வேற?
ஹைதராபாத்: அல்லு அர்ஜுன் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள புஷ்பா திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.
அந்த டிரைலரை பார்த்த இயக்குநர் ராம் கோபால் வர்மா போட்ட ட்விட்டர் பதிவு டோலிவுட் மற்றும் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சண்டையை கிளப்பி உள்ளது.
அல்லு அர்ஜுன் மட்டும் தான் உண்மையான சூப்பர்ஸ்டார் என்றும் மற்ற முன்னணி நடிகர்கள் இப்படியொரு கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பார்களா? என்றும் பகிரங்கமாக சவால் விட்டுள்ளார்.

டிரெண்டாகும் புஷ்பா டிரைலர்
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என 4 தென்னிந்திய மொழிகளில் வெளியாகி உள்ள அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படத்தின் டிரைலர்கள் ஒவ்வொரு மொழிகளிலும் பட்டையை கிளப்பி டிரெண்டாகி வருகின்றன. அல்லு அர்ஜுன் காட்சிக்கு காட்சி தனது அசத்தலான நடிப்பால் அதிர வைத்துள்ளார்.

ராம் கோபால் வர்மா பாராட்டு
அல்லு அர்ஜுனின் புஷ்பா டிரைலரை பார்த்து அல்லு அர்ஜுன் தான் ஒன் அண்ட் ஒன்லி சூப்பர்ஸ்டார் என இயக்குநர் ராம் கோபால் வர்மா உச்சி முகர்ந்து பாராட்டி உள்ளார். ராம் கோபால் வர்மாவின் ட்வீட் அல்லு அர்ஜுன் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

ரஜினிகாந்தை சீண்டி
எந்தவொரு பயமும் இல்லாமல் உண்மையான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்த அல்லு அர்ஜுனுக்கு பாராட்டுக்களை தெரிவித்த இயக்குநர் ராம் கோபால் வர்மா டோலிவுட்டின் முன்னணி நடிகர்களான பவன் கல்யாண், சிரஞ்சீவி, மகேஷ் பாபு மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சீண்டி வம்பிழுத்துள்ளார்.

ரஜினி நடிப்பு பற்றி தெரியுமா
அரை புத்தி தான் உனக்கு இருக்கு.. 1978ல் வந்த ரஜினிகாந்தின் முள்ளும் மலரும், அதற்கு அடுத்து வெளியான ஆறில் இருந்து அறுபது வரை படத்தை எல்லாம் போய் பாருங்க ரியாலிஸ்டிக்னா என்னன்னு புரியும் என ராம் கோபால் வர்மாவுக்கு ரஜினிகாந்தின் தெலுங்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

திட்டும் ரசிகர்கள்
அல்லு அர்ஜுனின் பர்ஃபார்மன்ஸ் புஷ்பா படத்தில் நல்லா இருந்தா பாராட்டுங்க.. அதை விடுத்து ரஜினிகாந்த், மகேஷ் பாபு, பவன் கல்யாண் மற்றும் சிரஞ்சீவி பெயரை எல்லாம் எதற்கு வம்புக்கு இழுக்கிறீங்க என ரசிகர்கள் ராம் கோபால் வர்மாவை கண்டபடி திட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











