'தற்கொலை செய்துகொள்ளலாம் போல இருக்கிறது' - பிரபல இயக்குநர் உருக்கமான பதிவு

By Vignesh Selvaraj

Recommended Video

ராம்கோபால் வர்மா உருக்கமான பதிவு- வீடியோ

சென்னை : ஶ்ரீதேவியின் மறைவுக்கு அவரோடு நடித்த நடிகர்கள், படம் இயக்கியவர்கள், அவரது படங்களில் பணிபுரிந்தவர்கள் எனப் பலரும் உருக்கமான அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

ஶ்ரீதேவியின் உடல் துபாயில் விசாரணை முடிந்து இன்னும் இந்தியாவுக்கு கொண்டுவரப்படவில்லை. இன்று மாலை கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா, ஸ்ரீதேவி மரணம் பற்றி வெளிவரும் தகவல்களால் மனம் வருந்தி ட்விட்டரில் உருக்கமான ட்வீட் போட்டிருக்கிறார்.

ராம்கோபால் வர்மா

ராம்கோபால் வர்மா

ஶ்ரீதேவின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்டதில் இருந்து அவருடனான தனது பயணம் குறித்து ட்விட் செய்து வருகிறார் ராம்கோபால் வர்மா. ராம்கோபால் வர்மாவுக்கு மிகவும் பிடித்த நடிகையாக விளங்கியவர் ஶ்ரீதேவி. அதனால், ஶ்ரீதேவியின் இறப்பை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

பகிரும் ராம்கோபால் வர்மா

பகிரும் ராம்கோபால் வர்மா

ஶ்ரீதேவியின் மரண செய்தி வந்ததில் இருந்து இயக்குனர் ராம்கோபால் வர்மா ஸ்ரீதேவி பற்றிய சுவாரஸ்ய விஷயங்களையும், அவருடன் எடுத்த புகைப்படங்களையும் ட்விட்டரில் ஷேர் செய்து கொண்டிருந்தார்.

முன்பும் இப்போதும்

ஶ்ரீதேவி குறித்து அவரது உடல் அழகு, ஈர்க்கும் கண்கள், அவரது உதடுகள், அற்புதமான இடுப்பு மற்றும் தொடைகளைப் பற்றிப் பேசினார்கள். இப்போது அவரது மரண அவஸ்தை, ரத்தத்தில் மதுபானம், நுரையீரலில் தண்ணீர், அவரது வயிற்றில் என்ன இருக்கிறது எனப் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

தற்கொலை செய்துகொள்ளலாம் போல

"மனிதர்களின் வாழ்க்கை இவ்வளவு சோகமாகவும் கொடூரமாகவுமா முடிவடையும்?" எனக் கேட்டுள்ளார். ஶ்ரீதேவியின் மரணம் குறித்து நிறைய பரபரப்பு தகவல்கள் வருவதால் அதையெல்லாம் கேட்கும்போது தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தோன்றுவதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X