சுஷாந்த் சிங்குடன் ஒன்றாக வாழ்ந்து வந்தேன்.. என்னை வழக்கில் சேர்த்தது தவறு.. பிரபல நடிகை மனு!

By

மும்பை: நடிகர் சுஷாந்த் சிங்குடன் ஒன்றாக வாழ்ந்து வந்தேன், என்னை தவறாக வழக்கில் சேர்த்துள்ளனர் என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

Recommended Video

Rhea Chakraborty manipulated Sushant Singh • 'புது திருப்பம்'

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.

இளம் நடிகர் ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

அவர் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சுஷாந்த் தற்கொலை தொடர்பாக சுஷாந்தின் நண்பர்கள், தோழிகள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், இயக்குனர்கள் என சுமார் 38 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். தொடர்ந்து நடத்தி வருகின்றனர். நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலி நடிகை ரியா சக்கரவர்த்தியிடமும் விசாரித்தனர்.

சுஷாந்த் சிங் தந்தை

சுஷாந்த் சிங் தந்தை

அவரிடம் பல மணி நேரம் நடந்த விசாரணையில், அவர் பல்வேறு தகவல்களைத் தெரிவித்தார். இந்நிலையில் மறைந்த சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், பாட்னா ராஜீவ் நகர் போலீஸ் ஸ்டேஷனில் நடிகை ரியா மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் பரபரப்பு புகார் கொடுத்தார். அதில் அவர், சுஷாந்தை நடிகை ரியா மிரட்டி வந்துள்ளார் என்றும் சுஷாந்த் சிங்கின் வங்கி கணக்குகளை, ரியாதான் கையாண்டு வந்ததாகவும் கூறியுள்ளார்.

15 கோடி ரூபாய்

15 கோடி ரூபாய்

மேலும் சுஷாந்த் வங்கி கணக்கில் இருந்து கடந்த ஒரு வருடமாக, 15 கோடி ரூபாய் வரை, ரியாவுக்கு பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ரியா, அவரது குடும்பத்தினர் மீது பாட்னா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த பாட்னா போலீசார், மும்பை வந்துள்ளனர்.

அங்கிதா லோகண்டே

அங்கிதா லோகண்டே

இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலியான டிவி நடிகை அங்கிதா லோகண்டே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'Truth Wins' என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து நடிகை அங்கிதா லோகண்டேவிடம் பாட்னா போலீசார் விசாரணை நடத்தினார். சுஷாந்த் சிங் பற்றியும் ரியா பற்றியும் அங்கீதாவின் காதல் பற்றியும் விசாரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ரியா சக்கரவர்த்தி

ரியா சக்கரவர்த்தி

இதற்கிடையே பாட்னாவில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை மும்பையில் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று நடிகை ரியா சக்கரவர்த்தி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது: சுஷாந்த் சிங்குடன் ஒன்றாக வாழ்ந்து வந்தேன். இருவரும் ஜூன் 8 ஆம் தேதி வரை ஒரே வீட்டில்தான் வசித்து வந்தோம்.

தவறாக இணைத்துள்ளார்

தவறாக இணைத்துள்ளார்

அவருக்கு மன அழுத்தம் இருந்தது. இதுபற்றிய விவரங்களை போலீசில் தெரிவித்து விட்டேன். இந்த வழக்கில் சுஷாந்த் சிங்கின் தந்தை என்னை தவறாக இணைத்துள்ளார். ஏற்கனவே எனக்கு கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக மும்பை போலீசில் புகார் கொடுத்துள்ளேன். அதனால் பாட்னாவில் உள்ள வழக்கை மும்பையில் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X