சுஷாந்துக்காக மாய மந்திரங்களை அணுகிய ரியா சக்ரவர்த்தி.. விசாரணையில் அம்பலமான உண்மை!
சென்னை: சுஷாந்துக்காக அவரது காதலியான ரியா சக்ரவர்த்தி ஸ்பிரிட்சுவல் ஹீலரை அணுகிய தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்து 2 மாதங்கள் கடந்து விட்டன. அவரது மரணம் தொடர்பாக ஒவ்வொரு நாளும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது.
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், நடிகை ரியா சக்ரவர்த்தியை காதலித்தார். அவரது மரணத்திற்கு பிறகு, சுஷாந்தின் குடும்பத்தினர் ரியா சக்ரவர்த்தி தான் சுஷாந்தின் இறப்புக்கு காரணம் என புகார் அளித்தனர்.

ஸ்பிரீட்சுவல் ஹீலர்
இதைத்தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி வருகிறார் ரியா சக்ரவர்த்தி. இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை அவரது காதலியான ரியா சக்ரவர்த்தி ஸ்பிரீட்சுவல் ஹீலரிடம் அழைத்து சென்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்மீக ஹீலர்
ஏற்கனவே மாந்த்ரீகம் மூலம் தான் சுஷாந்த் சிங் ராஜ்புத் கொல்லப்பட்டார் என தகவல் வெளியானது. இந்நிலையில் அதிக மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருந்த சுஷாந்தை குணப்படுத்த ரியா சக்கரவர்த்தி கடந்த ஆண்டு மோகன் சாதஷிவ் ஜோஷி என்ற ஆன்மீக ஹீலரை அணுகியுள்ளார்.

90% குணமடைந்தார்
இதுதொடர்பாக பேசிய அவர், மறைந்த நடிகர் சுஷாந்தை குணப்படுத்த தன்னை ரியா சக்ரவர்த்தி அணுகியதாக அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 22 மற்றும் 13 ஆம் தேதிகளில் மறைந்த நடிகரை சந்தித்ததாக மோகன் சதாஷிவ் ஜோஷி கூறியதுடன், சுஷாந்த் 90 சதவீதம் குணமடைந்துவிட்டார் என்று கூறினார்.

இரண்டு முறை சந்தித்தேன்
மேலும் தான் அவரை குணமாக்கினேன் என்றும் மறுநாள் அவர் நலமாக இருந்தார் என்றும் கூறினார். தன்னால் சுஷாந்த் 90 சதவீதம் குணமாகிவிட்டார், அதைத்தான் அவர்கள் இருவரும் என்னிடம் தெரிவித்தனர். மறுநாளும் அவரை சந்தித்தேன். நாங்கள் இரண்டு நாள் சந்தித்தோம் என்றும் ஆன்மீக ஹீலர் மோகன் சதாஷிவ் ஜோஷி தெரிவித்துள்ளார்.

செல்ல முடியவில்லை
இதுதொடர்பான விசாரணைக்கு போலீசார் தன்னை அழைத்ததாகவும் ஆனால் தனது உடல் நலன் மற்றும் மருத்துவம் சார்ந்த விஷயங்களுக்காக தன்னால் செல்ல முடியவில்லை என்றும் ஆன்மீக ஹீலரான மோகன் சதாஷிவ் ஜோஷி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











