ஜாமீன் தர மறுப்பு.. போதைப் பொருள் விவகாரம்.. ரியா சக்கரவர்த்தி, தம்பி சோவிக் மனு தள்ளுபடி
மும்பை: நடிகை ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது சகோதரர் சோவிக் சக்கரவர்த்தியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கை தற்போது சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் நார்காடிக்ஸ் என மூன்று முகமைகள் விசாரித்து வருகின்றன.
போதைப் பொருள் புழக்கம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து நடிகை ரியா சக்கரவர்த்தி மற்றும் அவரது தம்பி சோவிக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாறிய வழக்கு
கடந்த ஜூன் 14ம் தேதி மும்பை, பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கண்டெடுக்கப்பட்டதாக மும்பை போலீசார் தெரிவித்து இருந்தனர். அந்த வழக்கு விசாரணையில் சிக்கி உள்ள ரியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப் பொருள் புழக்கம் இருப்பது தெரிய வந்து தற்போது வழக்கே வேறு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது.

பதற்றத்தில் பாலிவுட்
இதுவரை சுஷாந்த் சிங் ராஜ்புத் விவகாரத்திலும், நடிகை ரியா சக்கரவர்த்திக்கும் ஆதரவு தராத பல பாலிவுட் பிரபலங்களும், வழக்கு போதைப் பொருள் விவகாரத்தை நோக்கி நகர்வதால், தற்போது நடிகை ரியாவுக்கு ஆதரவாகவும், சுஷாந்த் சிங் ராஜ்புத்தை வில்லனாகவும் மாற்ற சிலர் முயற்சித்து வருகின்றனர்.

அதிரடி கைது
நடிகை ரியா சக்கரவர்த்தியின் சகோதரர் சோவிக் சக்கரவர்த்திக்கு போதைப் பொருள் விற்பனை செய்பவர்களுடன் உள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், தொடர்ந்து மூன்று நாட்கள் நடிகை ரியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் முடிவில், அவரும் தனது குற்றத்தை ஒப்புக் கொண்ட காரணத்தினால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

தம்பி வாக்குமூலம்
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்குக்காகத் தான் போதைப் பொருள் வாங்கிக் கொடுத்தேன் என்றும், தனக்கு வேறு எதுவும் தெரியாது என்று நடிகை ரியா சக்கரவர்த்தியின் சகோதரர் சோவிக் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் வாக்கு மூலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜாமீன் மறுப்பு
மும்பை சிறப்பு நீதிமன்றத்தில், தனக்கும் தனது தம்பிக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என நடிகை ரியா சக்கரவர்த்தி தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி குர்ராவ், சிறப்பு பப்ளிக் பிராசிக்யூட்டர் அதுல் சர்பாண்டேவின் வாதத்தை ஏற்று இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட யாருக்கும் ஜாமீன் வழங்க முடியாது என உத்தரவு பிறப்பித்துள்ளர்.

போதைப் பொருளை ஏற்பாடு செய்தனர்
வழக்கறிஞர் அதுல் சர்பாண்டே, நடிகை ரியா சக்கரவரத்தி மற்றும் சோவிக் ஆகிய இருவரும் தான் போதைப் பொருள் விநியோகத்திற்கு நிதி அளித்துள்ளனர் என்றும், அதனை ஏற்பாடு செய்து சுஷாந்துக்கு கொடுத்துள்ளனர் என்றும் குற்றம்சாட்டி அதற்கான ஆதாரங்களை சமர்பித்தார். அப்துல் பசீத், சையது விலாத்ரா, திபேஷ் சாவந்த், மற்றும் சாமுவேல் மிராண்டா ஆகிய அனைவருக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டது. நீதிமன்ற காவலில் நடிகை ரியா இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











