சுஷாந்துக்கு அந்த பயம் இருந்தது.. மனநல பிரச்சனையால் ரொம்பவே கஷ்டப்பாட்டார்.. ரியா எக்ஸ்க்ளூசிவ்!
மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு மனநல பிரச்சனை இருந்தது பற்றி தனக்கு எப்போது தெரிய வந்தது என்பது குறித்து நடிகை ரியா சக்கரவர்த்தி பிரத்யேக பேட்டி கொடுத்துள்ளார்.
Recommended Video
பாலிவுட் ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பும் தற்போது நடிகை ரியா சக்கரவர்த்தி மீது தான்.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தை விஷம் கொடுத்து கொலை செய்து விட்டார் ரியா என சுஷாந்த் சிங்கின் அப்பாவும் குற்றம்சாட்டியுள்ளார்.

ரியா எக்ஸ்க்ளூசிவ்
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் நடிகையும் சுஷாந்தின் காதலியுமான ரியா சக்கரவர்த்திக்கு தொடர்பு இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. சுஷாந்துக்கு போதை மருந்து கொடுத்ததாகவும், விஷம் கொடுத்து கொன்றே விட்டதாகவும் அவர் மீது கொலை பழியும் விழுந்துள்ளன. இந்நிலையில், இந்தியா டுடேவுக்கு எக்ஸ்க்ளூசிவ் பேட்டி ஒன்றை ரியா கொடுத்துள்ளார்.

மனநல பாதிப்பு
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மனநலம் பாதிக்கப்பட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்றே மும்பை போலீசார் முதற் கட்டமாக அறிக்கை வெளியிட்டனர். இந்நிலையில், தற்போது பேட்டியளித்த நடிகை ரியா சக்கரவர்த்தியும் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு மனநல பாதிப்பு இருந்ததாகவும் அதற்காக அவர் Modafinil எனும் மாத்திரை எடுத்துக் கொள்வார் என்றும் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

விமான பயணத்தின் போது
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுஷாந்த் சிங் ராஜ்புத்தும், நடிகை ரியா சக்கரவர்த்தியும் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா பயணம் சென்றிருந்தனர். அப்போது விமானத்தில் செல்லும் போது, அவருக்கு claustrophobic எனும் விமானத்தில் செல்லும் போது ஏற்படும் பயம் இருந்ததை கண்டு தான் ஆச்சர்யப்பட்டதாகவும், பின்பு அந்த மாத்திரை போட்டுக் கொண்டார்.

பேய் வீடு
ஸ்விட்சர்லாந்துக்கு சென்றிருந்த போது, ரொம்பவே எனர்ஜியாக சுஷாந்த் இருந்தார். ஆனால், நாங்கள் தங்க அவர் புக் செய்திருந்த அறை ஒரு பேய் வீடு போல இருந்தது என்றும், அந்த அறையை மாற்றி விடலாம் எனக் கூறிய போது, அதெல்லாம் வேண்டாம், இங்க நல்லா இருக்கும் எனக் கூறினார். அடிக்கடி மயக்கம் வந்து விழுந்து விடுவார், பித்து பிடித்ததை போல பேசுவார்.

மன நல சிகிச்சை
ஏன்? என்ன ஆச்சு? உங்களுக்கு என்ன செய்கிறது என்று நான் கேட்டதற்கு, 2013ம் ஆண்டு தனக்கு ரொம்ப மன அழுத்தம் ஏற்பட்டதாகவும், ஹரேஷ் ஷெட்டி எனும் மன நல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்ததாகவும், அவர் அறிவுறுத்தலின் பேரிலேயே அந்த Modafinil மாத்திரையை போட்டு வருகிறேன் என்றும் சுஷாந்த் கூறியதாக அந்த பேட்டியில் விவரித்துள்ளார்.

அவர் காசுல
நடிகை ரியா, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பணத்தை அவருக்கே தெரியாமல் திருடியுள்ளதாகவும், பண மோசடி செய்துள்ளதாகவும், சுஷாந்த்தின் அப்பா கே.கே. சிங் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இந்த ஐரோப்பா ட்ரிப் அவருடைய காசுல தான் போனீங்களா? என்ற கேள்விக்கு, அதற்கு முன்னதாகவே பிரான்ஸில் ஃபேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொள்ள தனக்கு டிக்கெட்டுகள் வந்ததாகவும், சுஷாந்த் தான் அதனை கேன்சல் செய்ய சொல்லிவிட்டு,, அப்படியே ஜாலியா ஒரு ஐரோப்பா ட்ரிப் போகலாம் என்றும் சொன்னார். அவரது காதலியாகத் தான் அந்த இடங்களுக்கு சென்றேன் மற்றபடி காசை பற்றிய எண்ணம் இல்லை என்றார்.


Click it and Unblock the Notifications