twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தற்கொலைக்கு முதல்நாள் சுஷாந்த், காரில் இறக்கிவிட்டாரா? பக்கத்துவீட்டுப் பெண் மீது ரியா வழக்கு!

    By
    |

    மும்பை: பொய்யான குற்றச்சாட்டுகளை கூறியதாக, தனது பக்கத்துவீட்டு பெண் மீது நடிகை ரியா சக்கரவர்த்தி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

    நடிகர் சுஷாந்த் சிங், கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், நடிகையும் சுஷாந்தின் காதலியுமான ரியா சக்கரவர்த்தி மீது பரபரப்பு புகார் அளித்தார்.

    எதிர்பார்ப்பு எல்லாம் வீணாகிவிட்டது.. நடிகர் சங்கத்தில் இருந்து திடீரென விலகினார் பிரபல நடிகை! எதிர்பார்ப்பு எல்லாம் வீணாகிவிட்டது.. நடிகர் சங்கத்தில் இருந்து திடீரென விலகினார் பிரபல நடிகை!

    சி.பி.ஐ. விசாரணை

    சி.பி.ஐ. விசாரணை

    அவர்தான் சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டினார் என்றும், பணமோசடி செய்ததாகவும் கூறியிருந்தார். இதையடுத்து போலீசார் நடிகை ரியா சக்கரவர்த்தி மீது வழக்குப்பதிவு செய்தனர். நடிகை ரியா மீது கூறப்பட்ட பண மோசடி மற்றும் பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை, விசாரணை நடத்தியது. இந்நிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

    ரியா மீது வழக்கு

    ரியா மீது வழக்கு

    பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்த போது ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுபற்றி போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தெரிவித்தனர். அவர்கள் நடிகை ரியா மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    ரியா கைது

    ரியா கைது

    நடிகை ரியாவின் சகோதரர் சோவிக் சக்கரவர்த்தி, சுஷாந்த் வீட்டு மானேஜர் சாமுவேல் மிரண்டா ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பிறகு இருவரையும் போதைப் பொருள் வழக்குக்காக கைது செய்த போலீசார், பின்னர் நடிகை ரியா சக்கரவர்த்தியையும் கைது செய்தனர்.

    பைகுலா சிறை

    பைகுலா சிறை

    சுமார் ஒரு மாதமாக பைகுலா சிறையில் இருந்த ரியா, கடந்த வாரம் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் தனது பக்கத்து வீட்டுப் பெண் டிம்பிள் தவானி மீது சிபிஐ-யில் புகார் கூறியுள்ளார். அதில், டிம்பிள் தவானி வேண்டும் என்றே, இந்த வழக்கை திசை திருப்பும் விதமான பொய்யான புகார்களை தெரிவித்துள்ளார்.

    தவறான குற்றச்சாட்டு

    தவறான குற்றச்சாட்டு

    ஜூன் 13 ஆம் தேதி சுஷாந்த் சிங் என்னை எனது வீட்டில் காரில் இறக்கிவிட்டார் என அவர் கூறியது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார். ரியாவின் வழக்கறிஞர், சி.பி.ஐ. சிறப்பு பிரிவு தலைவர் நுபுர் சர்மாவுக்கு இந்த புகாரை அளித்து உள்ளார்.

    English summary
    After Rhea Chakraborty complained to CBI against her neighbour for making false claims that Sushant Singh Rajput dropped her home on June 13.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X