ஒரு மாத ஜெயில் வாழ்க்கைக்கு பிறகு கிடைத்த பெயில்.. நடிகை ரியாவுக்கு கோர்ட் போட்ட கண்டிஷன் என்ன?

மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு தொடர்பாக நடிகை ரியா சக்கரவர்த்தி விசாரிக்கப்பட்ட நிலையில், போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் செப்டம்பர் 8ம் தேதி கைது செய்யப்பட்டார்.

உடனடியாக ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் முறையிட்ட நடிகை ரியா சக்கரவர்த்தியின் வழக்கு பல முறை தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், ஒரு மாதத்திற்கு பிறகு தற்போது நடிகை ரியாவுக்கு ஜாமின் கிடைத்துள்ளது.

சுஷாந்த் சிங் காதலி

சுஷாந்த் சிங் காதலி

மறைந்த இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை காதலித்து வந்த நடிகை ரியா சக்கரவர்த்தி, சுஷாந்த் சிங் அறையில் இருந்து அவர் இறப்பதற்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாக காலி செய்து விட்டு சென்றார். ஜூன் 14ம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டு இறந்த நிலையில், அவரது காதலி இந்த மரண வழக்கு விசாரணையில் சிக்கினார்.

தற்கொலை தான்

தற்கொலை தான்

சுஷாந்த் சிங் ராஜ்புத்தை நடிகை ரியா சக்கரவர்த்தி திட்டமிட்டே போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாக்கி கொலை செய்தார் என்றும், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வங்கி கணக்கில் இருந்து கோடிக்கணக்கான பணத்தை கையாடல் செய்தார் என்றும் சுஷாந்த் குடும்பத்தினர் தொடர்ந்து வழக்கு காரணமாக ரியாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சிக்கிய தம்பி

சிக்கிய தம்பி

நடிகை ரியா சக்கரவர்த்தியின் தம்பி செளவிக் சக்கரவர்த்தியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவனுக்கு போதைப் பொருள் டீலர்களிடம் தொடர்பு இருப்பது அம்பலமானது. அவனை கைது செய்து விசாரித்த நிலையில், அடுத்ததாக நடிகை ரியா சக்கரவர்த்திக்கும் போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு உள்ளதை உறுதி செய்த என்சிபி அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

ஒரு மாதத்திற்கு பிறகு

ஒரு மாதத்திற்கு பிறகு

கடந்த செப்டம்பர் 8ம் தேதி நடிகை ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்ட நிலையில், அக்டோபர் 7ம் தேதியான இன்று அவருக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. மும்பையில் உள்ள மற்றொரு கோர்ட் நேற்று ஜாமின் மறுத்து, ரியாவை அக்டோபர் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட நிலையில், மும்பை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது.

ஜாமின் மறுப்பு

ஜாமின் மறுப்பு

போதைப் பொருள் விவகாரத்தில் வசமாக சிக்கி உள்ள நடிகை ரியா சக்கரவர்த்தியின் தம்பி செளவிக் சக்கரவர்த்திக்கு ஜாமின் வழங்க மும்பை உயர்நீதிமன்றம் வழக்கம் போல மறுத்துவிட்டது. ஒரு மாதத்திற்கு பிறகு நடிகை ரியா ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஏகப்பட்ட நிபந்தனைகளை கோர்ட் விதித்துள்ளது.

என்ன கண்டிஷன்

என்ன கண்டிஷன்

ஒரு லட்சம் ரூபாய் ஜாமினில் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறார் நடிகை ரியா சக்கரவர்த்தி. தினமும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தொடர்ந்து 10 நாட்களுக்கு சென்று கையெழுத்து போட வேண்டும். மேலும், தனது பாஸ்போர்ட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும், அனுமதி பெறாமல் எங்கேயும் செல்லக் கூடாது என கண்டிஷன் போட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X