பயங்கரமான நடிகை.. என் சீரிஸில் வில்லி ரோல் கொடுக்கிறேன்.. காதலி நடிகையை விளாசிய ஆன்ட்டி நடிகை!
சென்னை: மறைந்த நடிகர் சுஷாந்தின் காதலியான ரியா சக்ரவர்த்தியை பயங்கரமான நடிகை என நடிகை கவிதா ராதேஷ்யம் விளாசியுள்ளார்.
Recommended Video
பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் கடந்த ஜூன் மாதம் வீட்டில் தூக்கில் தொங்கியப்படி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அவரது மரணம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்தின் மரணத்திற்கு அவரது காதலியான ரியா சக்ரவர்த்திதான் காரணம் என குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன.

வாட்ஸ் அப் சாட்
இந்நிலையில் சுஷாந்துக்கே தெரியாமல் ரியா சக்ரவர்த்தி அவருக்கு தடை செய்யப்பட்ட போதை மருந்துகளை கொடுத்தது வாட்ஸ் அப் சாட்டுகளின் மூலம் அம்பலமானது. மேலும் சுஷாந்தை ரியா சக்ரவர்த்தி தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததும் அவரது வாட்ஸ் அப் சாட்டுகளின் மூலம் அம்பலமானது.

அக்காவைதான் கேட்கனும்
ஆனால் ஊடகங்களுக்கு பேட்டியளித்து வரும் நடிகை ரியா சக்ரவர்த்தி, சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட நேரத்தில் தான் அவருடன் இல்லை என்றும் போனில் கூட அவரிடம் பேசவில்லை. ஆகையால் அப்போது சுஷாந்துடன் இருந்த அவரது அக்காவைதான் கேட்கவேண்டும் என்றார்.

ரியா நடிக்கிறார்
மேலும் சுஷாந்த் மரணத்தில் உள்ள உண்மை என்ன, நான் இல்லாத போது அவருக்கு என்ன நடந்தது என்பது எனக்கும் தெரிய வேண்டும் என்றும் கூறினார். அவரது இந்த பேட்டியை பார்த்த சுஷாந்தின் ரசிகர்களும் உறவினர்களும் ரியா சக்ரவர்த்தி நல்லவரை போல் நடிக்கிறார் அவரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கவிதா விளாசல்
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகையான கவிதா ராதேஷ்யம் ரியா சக்ரவர்த்தியை கடுமையாக விளாசி தள்ளியுள்ளார். நடிகை கவிதா ராதேஷ்யம் பிரபல பாலிவுட் நடிகையாகவும் வெப் சீரிஸ் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராகவும் உள்ளார்.

கவிதா பாபி வெப் சீரிஸ்
இந்தி மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் கவிதா ராதேஷ்யம். அவர் நடித்த கவிதா பாபி வெப் சீரிஸ்கள் வேற லெவலில் ஹிட்டானது.

பஜ்ஜிக்கடை ஆன்ட்டி
நடிகை கவிதா ராதேஷ்யம், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் பஜ்ஜிக்கடை ஆன்ட்டியாக நடித்திருந்தார். அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வரும் கவிதா ராதேஷ்யம், இன்ஸ்டாகிராமிலும் செம ஆக்டிவாக உள்ளார்.

வில்லி ரோல்
இந்நிலையில் ரியா சக்ரவர்த்தியின் படு கிளாமரான போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள கவிதா ராதேஷ்யம், தான் ஒரு கிரியேட்டர் மற்றும் நடிகை என்பதால் ரியா சக்ரவர்த்திக்கு தன்னுடைய கவிதா பாபி சீசன் 3 வெப் சீரிஸில் வில்லி கதாப்பாத்திரம் கொடுக்க தயார் (அவர் ஒப்புக்கொண்டால்) என்று கூறியுள்ளர்.

பயங்கரமான நடிகை
மேலும் ரியா சக்ரவர்த்தி ஒரு பயங்கரமான நடிகை என்று கூறியுள்ள கவிதா ராதேஷ்யம், நான் வெளி ஆளாக இருந்தாலும் வேலை கொடுக்க தயாராக இருக்கிறேன். ஏஜென்சிகளையும் முயற்சித்துப் புரிந்துகொள்வேன் என மறைமுகமாக சாடியிருக்கிறார்.

மகேஷ் பட்டுடன்..
அவரது இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், அவருக்கு வில்லி கதாப்பாத்திரம் கூட கொடுக்காதீர்கள், அவரை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் மகேஷ் பட்டையும் ரியா சக்வர்த்தியையும் வைத்து ஒரு வெப் சீரிஸ் எடுங்கள் என்றும் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











