போட்டுக் கொடுத்த ரியா.. மாட்டிக்கிட்ட ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான்.. இன்னும் எத்தனை பேரோ?

மும்பை: சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண விவகாரம், இப்போ போதைப் பொருள் விவகாரமாக பூதாகரம் எடுத்துள்ளது.

போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நடிகை ரியா சக்கரவர்த்தி, ஏகப்பட்ட நடிகைகள் மற்றும் நடிகர்களுக்கு இதில் தொடர்பு உள்ளது என்பதை போட்டு உடைத்துள்ளாராம்.

பிரபல நடிகைகளான ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாரா அலி கானின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதால், ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

விரிவடையும் மரண வழக்கு

விரிவடையும் மரண வழக்கு

பாலிவுட்டில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடப்பதாகவும், மாஃபியாக்களின் ஆதிக்கம் அதிக அளவில் செயல்பட்டு வருவதாகவும், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் கொஞ்சம் கொஞ்சமாக ரிவீல் செய்ய தொடங்கி இருக்கிறது. இந்திய அளவில் சினிமா துறையில் போதைப் பொருள் தொடர்பு அதிகரித்து இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகி பலருக்கும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது.

வாக்குமூலம் கொடுத்த ரியா

வாக்குமூலம் கொடுத்த ரியா

போதைப் பொருள் பயன்படுத்தியது, போதைப் பொருள் வாங்க பணம் கொடுத்தது என ஏகப்பட்ட பிரிவுகளில் போதைப் பொருள் தடுப்பு போலீசார் நடிகை ரியா சக்கரவர்த்தியை கைது செய்துள்ளனர். NCB அதிகாரிகளுக்கு நடிகை ரியா கொடுத்த 20 பக்க வாக்குமூலத்தில், 25 ஏ லிஸ்ட் பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாம்.

பல பிரபலங்கள்

பல பிரபலங்கள்

பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பாடகர்கள், காஸ்டிங் இயக்குநர்கள், துணை நடிகர்கள் என ஏகப்பட்ட நபர்களின் பெயர்களை நடிகை ரியா சக்கரவர்த்தி அம்பலப்படுத்தி உள்ளதாக பாலிவுட் மீடியாக்கள் பரபரப்பு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. வரும் செப்டம்பர் 22ம் தேதி வரை நடிகை ரியா நீதிமன்ற காவலில் இருக்கப் போவது குறிப்பிடத்தக்கது.

ரகுல் ப்ரீத் சிங்

ரகுல் ப்ரீத் சிங்

அந்த 25 ஏ லிஸ்ட் பிரபலங்களின் பெயர்களில், போதைப் பொருள் பயன்பாட்டில் ஈடுபட்ட முக்கிய மூன்று பிரபலங்களின் பெயர்கள் தற்போது வெளியாகி உள்ளன. நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் பெயரை நடிகை ரியா சக்கரவர்த்தி ரிவீல் செய்திருப்பது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சாரா அலி கான்

சாரா அலி கான்

ரகுல் ப்ரீத் சிங்கை தவிர்த்து மேலும், இரு பிரபலங்களின் பெயர்களும் கசிந்துள்ளன. பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் மகளும் இளம் பாலிவுட் நடிகையுமான சாரா அலி கான் தான் அந்த மற்றொரு பிரபலம் என்பது மேலும், பேரதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. இனிமேல், ரியாவுக்கு யாராவது பாலிவுட்டில் சப்போர்ட் பண்ணி பேசுவார்களா என்பது சந்தேகம் தான்.

ரசிகர்கள் கொந்தளிப்பு

ரசிகர்கள் கொந்தளிப்பு

நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான் மற்றும் பிரபல ஃபேஷன் டிசைனர் சைமன் கம்பட்டா ஆகிய மூவரின் பெயர்கள் வெளியான நிலையில், #RakulPreet, #SaraAliKhan உள்ளிட்ட ஹாஷ்டேக்குகளை பாலிவுட் ரசிகர்கள் மற்றும் தென்னிந்திய ரசிகர்கள் டிரெண்ட் செய்து நடிகை ரியா சக்கரவர்த்திக்கு எதிரான கோஷங்களை முழக்கமிட்டு வருகின்றனர்.

Recommended Video

நடிகை ரியா சக்கரவர்த்தி எந்த சிறையில் அடைக்கப்பட்டார்? தற்போதைய நிலை என்ன!
எங்கே போய் முடியப் போகுதோ?

எங்கே போய் முடியப் போகுதோ?

கர்நாடகாவில் ஏற்கனவே நடிகை ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ரானி உள்ளிட்டோர் போதைப் பொருள் விவகாரத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகை ரியா சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள 25 பிரபலங்களில் இன்னும் எத்தனை பெரிய தலைகள் பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது என்றும், இந்த விவகாரம் எங்கே போய் முடியப் போகுதோ? என்ற அதிர்ச்சியில் ஒட்டுமொத்த திரையுலகமும் ஸ்தம்பித்து போயுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X