'தைரியம் கிடைத்திருக்கிறது' பிரபல இயக்குனருடன் நடிகை ரியா பேசியது என்ன? லீக் ஆனது வாட்ஸ்அப் சாட்!

By

மும்பை: சுஷாந்த் சிங் வீட்டில் இருந்து வெளியேறிய அன்று பிரபல இயக்குனருடன் சாட் செய்துள்ளார் நடிகை ரியா. அந்த பரபரப்பு தகவல் லீக் ஆகியுள்ளது.

Recommended Video

Sushant காதலி Rhea விடம் நடந்த விசாரணை • தொடரும் திருப்பங்கள்

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி மும்பையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குற்றச்சாட்டுகள்

குற்றச்சாட்டுகள்

இந்நிலையில், பீகாரில் வசித்து வரும் சுஷாந்தின் தந்தை பாட்னா போலீசில் புகார் அளித்தார். அதில், சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரவர்த்தி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். ரியா, சுஷாந்தை தற்கொலைக்குத் தூண்டியதாகவும் அவர் வங்கி கணக்குகளை கையாண்டு வந்த ரியா, பண மோசடி செய்ததாகவும் கூறியிருந்தார்.

சி.பி.ஐ. அதிகாரிகள்

சி.பி.ஐ. அதிகாரிகள்

இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து சிபிஐ அதிகாரிகள் மும்பை வந்துள்ளனர். இந்நிலையில் நடிகை ரியாவுக்கும் பிரபல இயக்குனர் மகேஷ்பட்டுக்குமான வாட்ஸ் அப் சாட் லீக் ஆகியுள்ளது. நடிகர் சுஷாந்த் சிங்குடன் ஒரே வீட்டில் தங்கி இருந்தார் நடிகை ரியா. பின்னர் ஜூன் 8 ஆம் தேதி அவர் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இயக்குனர் மகேஷ் பட்

இயக்குனர் மகேஷ் பட்

சரியாக அதற்கு அடுத்த வாரம் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் ஜூன் 8 ஆம் தேதி, சுஷாந்த் வீட்டில் இருந்து வெளியேறியதும் நடிகை ரியா, இயக்குனர் மகேஷ் பட்டுக்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பி உள்ளார். இருவருக்குமான அந்த வாட்ஸ் அப் உரையாடல், இப்போது கசிந்துள்ளது. அதில் ரியாவுக்கும் சுஷாந்துக்கும் பிரேக் அப் ஆனது போலவும் அவருக்கு மகேஷ் பட் ஆறுதல் சொல்வது போல் அந்த சாட் இருக்கிறது.

அப்போதும் இப்போதும்

அப்போதும் இப்போதும்

ரியாவை குழந்தை என்று அழைத்துள்ளார் மகேஷ்பட். அதில் கூறியிருப்பதாவது: ரியா: ஆயிஷா கனத்த இதயத்துடன் நிம்மதியுடன் நகர்கிறாள் சார்.. (ஆயிஷா என்பது மகேஷ்பட் தயாரித்த ஜலேபி படத்தில் ரியாவின் பெயர்). எங்கள் கடைசி கால், விழித்துக் கொண்ட அழைப்பு. நீங்கள் என் ஏஞ்சல், அப்போதும் இப்போதும்.

சிறப்பு வாய்ந்தவராக

சிறப்பு வாய்ந்தவராக

மகேஷ்பட்: கடந்த காலம் பற்றி திரும்பி பார்க்க வேண்டாம். தவிர்க்க முடியாததை சாத்தியமாக்கப் பாருங்கள். உன் அப்பாவுக்கும் என் அன்பு. அவர் மகிழ்ச்சியான மனிதராக இருப்பார். ரியா: எனக்கு கொஞ்சம் தைரியம் கிடைத்திருக்கிறது. அன்று என் அப்பா பற்றி தொலைபேசியில் நீங்கள் சொன்னவை, அவருக்கு உறுதுணையாக இருக்க என்னைத் தூண்டியது. எப்போதும் எங்களுக்கு சிறப்பு வாய்ந்தவராக இருப்பதற்கு நன்றி.

அமைதியாக உணர்கிறேன்

அமைதியாக உணர்கிறேன்

மகேஷ் பட்: நீ என் குழந்தை. இப்போது அமைதியாக உணர்கிறேன். ரியா: வார்த்தைகள் இல்லை சார். சிறந்த மனநிலையை உணர்கிறேன். மகேஷ்பட்: தைரியமாக இருப்பதற்கு நன்றி. இவ்வாறு அவர்கள் சாட்டில் பேசியுள்ளனர். இந்த வாட்ஸ் அப் சாட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X