பிரபல நடிகைக்குப் பாலியல் வன்கொடுமை மிரட்டல்..முகம் தெரியாத நெட்டிசன்கள் மீது 3 பிரிவுகளில் வழக்கு!
மும்பை: பிரபல நடிகையை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவதாக மிரட்டியவர்கள் மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Recommended Video
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து ஒரு மாதம் கடந்துவிட்டது. மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
அவர் தற்கொலைக்கான காரணம் பற்றி மும்பை பாந்த்ரா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சினிமா வாரிசு
சுஷாந்த் சிங் மறைவை அடுத்து பாலிவுட்டில், நெபோடிசம் குறித்த விவாதம் தொடங்கியுள்ளது. திறமையில்லாத சினிமா பிரபலங்களின் வாரிசுகளால், மற்றவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பலர் கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைந்து ஒரு மாதம் ஆனதை அடுத்து, தனது வாட்ஸ் அப் டிஸ்பிளேவை மாற்றினார், அவரது காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தி.

வாழ்நாள் முழுவதும்
சுஷாந்த் சிங்குடன் தான் இருக்கும் மகிழ்ச்சியான புகைப்படத்தை வைத்தார். பின்னர் தனது இன்ஸ்டாவில் சுஷாந்த் பற்றி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டார். இது பாலிவுட்டில் பரபரப்பானது. வாழ்நாள் முழுவதும் உன்னை காதலித்துக் கொண்டே இருப்பேன் என்று அதில் கூறியிருந்தார் ரியா. இதையடுத்து தனக்கு வந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் பற்றி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

ஸ்கிரீன் ஷாட்
அதில், நான் தற்கொலை செய்துகொள்ளாவிட்டால், என்னை பாலியல் வன்கொடுமை செய்வோம் என்றும் கொன்று விடுவோம் என்றும் மிரட்டும் உரிமையை என் மவுனம் உங்களுக்கு எப்படி தருகிறது?' என்று கேட்டிருந்தார். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சைபர் கிரைம் போலீசாருக்கு கோரிக்கையும் வைத்திருந்தார். அதோடு தனக்கு வந்த கொலை மிரட்டல் மற்றும் பாலியல் வன்கொடுமை மெசேஜின் ஸ்கிரீன்ஷாட்டையும் பதிவு செய்திருந்தார்.

வழக்குப் பதிவு
இந்நிலையில், தனக்கு மிரட்டல் விடுத்த நபர் மீது, மும்பை சாந்தாகுரூஸ் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று எழுத்துப்பூர்வமான புகாரை அளித்தார். தனது நண்பர்களுடன் சென்ற அவர், இந்தப் புகாரை அளித்துள்ளார். இதையடுத்து மூன்று பிரிவுகளின் கீழ், அந்த முகம் தெரியாத நெட்டிசன்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். டெபுடி போலிஸ் கமிஷனர் அபிஷேக் திருமுகே கூறும்போது, 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரித்து வருகிறோம் என்றார்.


Click it and Unblock the Notifications











