சுஷாந்த் சகோதரி போதையில் தவறாக நடந்தார்.. என் மீதான புகார் இட்டுக்கட்டியவை.. ரியா திடீர் பரபரப்பு!
மும்பை: சுஷாந்த் சிங் குடும்பத்தினர் என் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் இட்டுக்கட்டப்பட்டவை என்று நடிகை ரியா சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
Recommended Video
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், ஜூன் மாதம் 14 ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
அவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக
சுஷாந்த் சிங்கின் காதலி நடிகை ரியா சக்கரவர்த்தி உள்பட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

வங்கி கணக்குகள்
இந்நிலையில், சுஷாந்த் சிங் தந்தை கே.கே.சிங், ரியா சக்கரவர்த்தி மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் பாட்னா போலீசில் புகார் கொடுத்தார். சுஷாந் சிங்கை, ரியா மிரட்டி வந்துள்ளார் என்றும் சுஷாந்தின் வங்கி கணக்குகளை, ரியா கையாண்டு வந்ததாகவும் அவர் கணக்கில் இருந்து ரூ.15 கோடி ரூபாய் வரை, ரியாவுக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

பணப் பரிமாற்றம்
இதுபரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை நடிகை ரியாவிடமும் அவர் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தியது. அதில் நடந்த விசாரணையில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நடிகை ரியாவுக்கு எதிரான கருத்துக்களை பலர் கூறி வருகின்றனர். இந்நிலையில் ரியா சார்பில் அவரது வழக்கறிஞர் இன்று நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஒன்றாக வசித்தனர்
அதில் கூறியிருப்பதாவது: சுஷாந்த் சிங்கை 2019-ல் நடந்த பார்ட்டியில் சந்தித்த பின் காதலிக்கத் தொடங்கினார் ரியா. இருவரும் 2019 ஆம் ஆண்டில் இருந்து ஒன்றாகவே வசித்து வந்தனர். கடந்த ஜூன் 8 ஆம் தேதி அவர் வீட்டில் இருந்து வெளியேறும் வரை ஒன்றாகத்தான் இருந்தனர். சுஷாந்த் சிங் குடும்பத்தினரால் ரியா மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் இட்டுக்கட்டப்பட்டவை.

நிதி பரிமாற்றம்
மும்பை காவல்துறை, அமலாக்கத்துறை ஆகியோரிடம் அனைத்து நிதி பரிமாற்ற அறிக்கைகளையும் ரியா அளித்துள்ளார். அதில் சுஷாந்திடம் இருந்து எந்த பணப் பரிமாற்றமும் நடக்கவில்லை என்பதை அவர்கள் தெரிந்துகொண்டனர். ரியாவுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டையும் அவர்கள் கண்டுபிடிக்கவில்லை. சுஷாந்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதில் இருந்து அவரது குடும்பத்தினர் நடிகை ரியாவை விலக்கினர்.

தவறாக நடந்தார்
காதலிக்கத் தொடங்கிய காலத்தில் ஒரு பார்ட்டிக்கு ரியாவும் சுஷாந்தின் சகோதரி பிரியங்காவும் சென்றனர். அங்கு பிரியங்கா அதிகமாக மது அருந்தி, அங்கிருந்த ஆண்கள் மற்றும் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டார். பிறகு வீட்டுக்குத் திரும்பினார். ரியா, சுஷாந்த் சிங்கின் பெட்ரூமில் படுத்திருந்திருந்தார். விழித்து பார்த்தபோது, அவரை இழுத்துக் கொண்டிருந்தார், பிரியங்கா. இதனால் கோபமான ரியா, அவரை அந்த அறையில் இருந்து வெளியேறச் சொன்னார்.

வாக்குவாதம்
பிறகு தனது வீட்டுக்குச் சென்ற ரியா, இதுபற்றி சுஷாந்திடம் சொன்னார். அவருக்கும் சகோதரி பிரியங்காவுக்கும் வாக்குவாதம் நடந்தது. இந்தப் பிரச்னை காரணமாக, சுஷாந்த் குடும்பத்துக்கும் ரியாவுக்குமான உறவில் ஏற்கனவே விரிசல் ஏற்பட்டது. சுஷாந்தின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள 20 பேர் பட்டியலை அவர் குடும்பத்தினர் தயாரித்தபோது அதில் ரியா பெயரை வேண்டும் என்றே சேர்க்கவில்லை.

ஆதித்யா தாக்கரே
பீகார் போலீஸின் விசாரணை தன்மை பற்றி ரியாவுக்கு பல சந்தேகம் இருந்தது. அரசியல் தலைவர் ஒருவரின் அழுத்தத்தால் பீகார் காவல்துறை எப்.ஐ.ஆர் பதிவு செய்தது. அவர்கள், விசாரணைக்கு ரியாவை அழைக்காமலேயே மும்பை வந்துவிட்டனர். பீகார் போலீசார் நடந்துகொண்ட விதம், நியாயமானதாக இல்லை. ரியா, இப்போதுவரை மகாராஷ்ட்ரா முதலமைச்சர் மகன் ஆதித்யா தாக்கரேவை ஒருபோதும் சந்தித்ததில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











