சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை.. காதலி ரியா திடீர் கோரிக்கை.. நெட்டிசன்ஸ் விளாசல்!

By

மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

Salman Khan is next target | Sushant Singh Case

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தற்கொலை செய்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது.

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கைக் கதையில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் சுஷாந்த் சிங்.

தில் பச்சாரே

தில் பச்சாரே

கை போ சே என்ற இந்தி படம் மூலம் நடிகராக அறிமுகமான சுஷாந்த் சிங், சுத் தேஸி ரொமான்ஸ், ஆமீர்கானின் பிகே ஆகிய படங்களில் நடித்தார். இதையடுத்து ராப்தா, வெல்கம் நியூயார்க், சிச்சோர், கேதார்நாத், டிரைவ் ஆகிய படங்களிலும் நடித்தார். இந்தப் படங்கள் அவருக்குப் பெயரைப் பெற்றுத் தந்தன. இப்போது, தில் பச்சாரே என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஒடிடி தளத்தில் இந்த மாத இறுதியில் வெளியாக இருக்கிறது.

போலீசார் விசாரணை

போலீசார் விசாரணை

மன அழுத்தம் காரணமாக நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதுதான் உண்மையான காரணமா என்பது பற்றி மும்பை பாந்த்ரா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 29 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தியுள்ளனர். சுஷாந்த் சிங்கின் உறவினர்கள் சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறியுள்ளனர்.

உள்துறை அமைச்சர்

உள்துறை அமைச்சர்

இந்நிலையில், நடிகையும் சுஷாந்த் சிங்கின் காதலியுமான ரியா சக்கரவர்த்தியும், சிபிஐ விசாரணை வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தனது சமூக வலைதளப் பக்கங்களில் சுஷாந்த் சிங் சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோ ஒன்றைப் பதிவு செய்துள்ள ரியா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டேக் செய்து இந்தக் கோரிக்கையை வைத்துள்ளார்.

சிபிஐ விசாரணை

சிபிஐ விசாரணை

அதில் அவர், 'நான், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கேர்ள்பிரண்ட் ரியா சக்கரவர்த்தி. சுஷாந்த் மறைந்து ஒரு மாதமாகிவிட்டது. எனக்கு மத்திய அரசின் மீது நம்பிக்கை இருக்கிறது. இந்த விஷயத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன். இப்படி ஒரு முடிவை எடுக்க சுஷாந்த் சிங்கைத் தூண்டிய விஷயம் எது என்பதை அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

ஏன் இந்த நாடகம்?

ஏன் இந்த நாடகம்?

இதற்கு பல நெட்டிசன்கள் அவரை திட்டிப் பதிவிட்டுள்ளனர். நடிகர் சுஷாந்த் சிங் மறைந்து ஒரு மாதத்துக்குப் பிறகு ஏன் இந்த நாடகம் என்றும் அனுதாபத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஏன் இப்படியெல்லாம் போலியாக பதிவிடுகிறீர்கள் என்றும் சிலர் கூறியுள்ளனர். சிலர், சுஷாந்த் சிங்கின் கேர்ள்பிரண்ட் என்று சொல்லாதீர்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X