ஜூனில் அந்த பிரபலத்துக்கு போன் செய்த ரியா சக்கரவர்த்தி.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

மும்பை: மர்ம நாவல்களையே மிஞ்சும் அளவுக்கு ஒரு பாலிவுட்டின் முன்னணி நடிகரின் மரண வழக்கு நடைபெற்று வருகிறது.

ரசிகர்கள், பிரபலங்கள் மற்றும் சுஷாந்தின் குடும்ப உறுப்பினர்களின் அழுத்தத்தின் விளைவாக சிபிஐக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

அமலாக்கத் துறையிடம் விசாரணைக்கு ஆஜராகியுள்ள சுஷாந்தின் காதலி ரியா சக்கரவர்த்தியின் செல்போன்களில் இருந்து திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகி உள்ளன.

கள்ளத் தொடர்பு

கள்ளத் தொடர்பு

நடிகை ஆலியா பட்டின் தந்தையும் பிரபல பாலிவுட் இயக்குநருமான மகேஷ் பட்டிற்கும் சுஷாந்த் சிங்கின் காதலி என சொல்லப்படும் நடிகை ரியா சக்கரவர்த்திக்கும் இடையே கள்ளத் தொடர்பு உள்ளதாக தொடர்ந்து பாலிவுட்டில் நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மகேஷ் பட்டுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

மகேஷ் பட் மறுப்பு

மகேஷ் பட் மறுப்பு

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக மகேஷ் பட்டிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்திய போது, நடிகர் சுஷாந்த் சிங்கை தனது வாழ்க்கையிலேயே இருமுறை மட்டுமே பார்த்ததாகவும், சதாக் 2 படத்தில் இருந்து அவரை நீக்க மற்றவர்கள் குற்றம்சாட்டுவது போல ரியா சக்கரவர்த்தி நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சுஷாந்த் வைத்தார் என்பதை மறுத்திருந்தார்.

தீவிர விசாரணை

தீவிர விசாரணை

பாட்னா போலீஸார் விசாரணைக்கு மறுப்புத் தெரிவித்து தலைமறைவாகி வந்த நடிகை ரியா சக்கரவர்த்தி வழக்கு விசாரணை சிபிஐக்கு சென்ற நிலையில், அமலாக்கத் துறையில் பண மோசடி வழக்கில் ஆஜரானார். ரியாவிடமும் அவரது தம்பியிடமும் பல மணி நேரம் அமலாக்கத் துறை கிடுக்கிப் பிடி விசாரணை நடத்தி உள்ளது.

மொபைல் போன், லேப்டாப்

மொபைல் போன், லேப்டாப்

சுஷாந்த் சிங் கணக்கில் இருந்து சுமார் 11 கோடிக்கும் மேல் மோசடி செய்து நடிகை ரியா சக்கரவர்த்தி சொத்துக்கள் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அவருடைய மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்ட டிஜிட்டல் கேட்ஜட்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

தப்புத் தப்பான பதில்

தப்புத் தப்பான பதில்

நடிகை ரியா சக்கரவர்த்தி சமீபத்தில் வாங்கி உள்ள சொத்துக்கள் குறித்து, உரிய ஆவணங்களோ, விளக்கத்தையோ அவரும் அவரது தம்பி செளவிக்கும் கொடுக்கவில்லை என்ற தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், தப்புத் தப்பான பதில்களையே சொத்துக்கள் வாங்கியதில் ரியா சக்கரவர்த்தி கூறி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஜூனில் போன் கால்

ஜூனில் போன் கால்

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14 மாதம் அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் நடிகை ரியா சக்கரவர்த்தியின் செல்போனில் இருந்து இயக்குநர் மகேஷ் பட்டுக்கு போன் கால் போயுள்ளது விசாரணையில் தெரியவந்து பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. மேலும், தனது பெயரில் பாசிட்டிவான செய்திகளை போட பிரபல பத்திரிகையாளர் ஒருவரையும் ரியா தொடர்பு கொண்டுள்ளதும் தெரியவந்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X