நடிகர் சுஷாந்த் சிங் வழக்கு.. சகோதரர், மானேஜர் கைது செய்யப்பட்ட நிலையில் நடிகை ரியாவுக்கும் சம்மன்!

By

மும்பை: போதைப்பொருள் வழக்குத் தொடர்பாக நடிகை ரியா சக்கரவர்த்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Recommended Video

Sushant Singh 4 அக்காவின் மனவலி 'Miss You Sushant'

நடிகர் சுஷாந்த் சிங், கடந்த ஜூன் மாதம் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது.

பரபரப்பு புகார்

பரபரப்பு புகார்

இந்நிலையில், நடிகர் சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், நடிகை ரியா சக்கரவர்த்தி மீது பரபரப்பு புகார் அளித்தார். அதில், சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டினார் என்றும், பணமோசடி செய்ததாகவும் கூறியிருந்தார். இதையடுத்து பாட்னா போலீசார் நடிகை ரியா சக்கரவர்த்தி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

வாட்ஸ்அப் உரையாடல்

வாட்ஸ்அப் உரையாடல்

நடிகை ரியா மீது கூறப்பட்ட பண மோசடி மற்றும் பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை, விசாரணை நடத்தியது. இந்நிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்த போது ரியாவின் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் அவருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

சகோதரர் கைது

சகோதரர் கைது

இதுபற்றி தேசிய போதைப் பொருள் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தெரிவித்தனர். அவர்கள் நடிகை ரியா மீது வழக்குப்பதிவு செய்தனர். நடிகை ரியாவின் சகோதரர் சோவிக் சக்கரவர்த்தி, சுஷாந்த் வீட்டு மானேஜர் சாமுவேல் மிரண்டா ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பிறகு இருவரையும் போதைப் பொருள் வழக்குக்காக கைது செய்தனர்.

ரியாவுக்கு சம்மன்

ரியாவுக்கு சம்மன்

இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வழக்கில் 5 பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், நடிகை ரியா சக்கரவர்த்திக்கு போதைபொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் விடுத்துள்ளனர். இன்று காலை ரியாவின் வீட்டுக்குச் சென்ற போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சம்மனை வழங்கி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X