என் வாழ்க்கையில் பெபுவுக்கு.. சுஷாந்த் சிங் டைரியில் இருந்து நடிகை ரியா வெளியிட்ட ஒரே ஒரு பக்கம்!
மும்பை: சுஷாந்த் சிங்கில் டைரியில் உள்ள ஒரு பக்கத்தை நடிகை ரியா சக்கரவர்த்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
நடிகர், சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வந்த நிலையில், இப்போது சிபிஐ வசம் சென்றிருக்கிறது.
சுஷாந்த் சிங்கின் நண்பர்கள், சினிமா இயக்குனர்கள், அவருடன் பழகிய நடிகர், நடிகைகள் உள்பட 38 பேரிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தி அதைப் பதிவு செய்தனர்.

பரபரப்பு புகார்
நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தியிடமும் விசாரித்தனர். அவரிடம் பல மணி நேரம் நடந்த விசாரணையில், அவர் பல்வேறு தகவல்களைத் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், ரியா சக்கரவத்தி மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் பாட்னா போலீஸில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

ரியா சக்கரவர்த்தி
அதில், 'சுஷாந்த் சிங்கை, ரியா சக்கரவர்த்தி மிரட்டி வந்துள்ளார் என்றும் சுஷாந்த் சிங்கின் வங்கி கணக்குகளை, ரியாதான் கையாண்டு வந்ததாகவும் அவர் கணக்கில் இருந்து கடந்த ஒரு வருடமாக, 15 கோடி ரூபாய் வரை, நடிகை ரியா சக்கரவர்த்திக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் இதில் மோசடி நடந்திருப்பதாகவும் அதில் தெரிவித்திருந்தார்.

அமலாக்கத்துறை
இதையடுத்து பாட்னா போலீசாரும் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். சுஷாந்த் சிங்கின் வங்கிக் கணக்கில் இருந்து சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பணப் பரிமாற்றம் நடந்திருப்பது குறித்து அமலாக்கத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் ரியா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த வழக்கில், நடிகை ரியா சக்கரவர்த்தி நேற்று ஆஜரானார்.

சுஷாந்த் சிங் டைரி
அவரிடம் 9 மணி நேரம் நடந்த விசாரணையில் அவர் கூறிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் நடிகை ரியா, சுஷாந்த் சிங்கின் டைரியில் இருந்து ஒரே ஒரு பக்கத்தை மட்டும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் நடிகை ரியா, அவர் சகோதரர் மற்றும் தந்தைக்கு நன்றி தெரிவித்துள்ளார் சுஷாந்த் சிங். நடிகை ரியா மீது பலர் பரபரப்பு புகார்களை கூறி வரும் நிலையில் அவர், டைரியின் இந்தப் பக்கத்தை வெளியிட்டுள்ளார்.

நன்றியுள்ளவனாக
சுஷாந்தின் கைப்பட எழுதப்பட்ட அந்த டைரியில், நான் என் வாழ்க்கைக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். லில்லுவுக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். பெபுவுக்கு (ரியா) நன்றியுள்ளவனாக இருக்கிறேன். 'சார்'க்கு, மேடத்துக்கு, ஃபட்ஜூக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். என் வாழ்க்கையில் என் மீது அன்புகொண்ட அனைவருக்கும் நன்றியுடையவனாக இருக்கிறேன்' என்று கூறியிருக்கிறார்.

தண்ணீர் பாட்டில்
இதில் ஃபட்ஜ் என்பது அவருடைய நாய், சார் என்பது ரியாவின் தந்தை, லில்லு, ரியாவின் சகோதரர். அதோடு சுஷாந்த் நடித்த சிச்சோர் படத்தின் பெயர் பொறிக்கப்பட்ட தண்ணீர் பாட்டில் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில் தன்னிடம் உள்ள சுஷாந்துக்குச் சொந்தமான பொருள் இது ஒன்றுதான் என்று நடிகை ரியா சக்கரவர்த்தி குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











