கதவைப் பூட்டிக்கொண்டு பலமணி நேரம் கதறி அழுவார் சுஷாந்த் சிங்.. போலீசிடம் காதலி அதிர்ச்சி தகவல்!

By

மும்பை: நடிகர் சுஷாந்த் சிங், கதவை அடைத்துக்கொண்டு பல மணிநேரம் கதறி அழுவார் என்று அவரது காதலி போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Sushant ரசிகர்களிடம் சரணடையும் Salman Khan

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கைக் கதையை கொண்ட படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
சுஷாந்த் சிங் பயன்படுத்திய மருந்து, மாத்திரைகள் மற்றும் மருந்துசீட்டுகளை அவர் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர். அது மன அழுத்தத்துக்காக அவர் பயன்படுத்திய மருந்துகள்தான் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

ரியா சக்கரவர்த்தி

ரியா சக்கரவர்த்தி

இருந்தும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. சுஷாந்தின் நண்பர்கள், தோழிகள், அவருடன் தொடர்பில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சுஷாந்த் சிங்கின் காதலியான ரியா சக்கரவர்த்தியிடமும் போலீசார் விசாரித்தனர். அவரிடம் 11 மணி நேரம் நடந்த விசாரணையில் அவர் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

முதல் சந்திப்பு

முதல் சந்திப்பு

இதுபற்றி ரியா கூறியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நான் சுஷாந்தை கடந்த 2013 ஆம் ஆண்டு சந்தித்தேன். அப்போது சுத் தேசி ரொமான்ஸ் என்ற படத்தில் அவரும் மேரா டாடி கி மாருதி என்ற படத்தில் நானும் நடித்து வந்தோம். இருவர் நடிக்கும் படங்களின் ஷூட்டிங்கும் அருகருகே நடந்தது. அப்போதுதான் முதன் முதலாகச் சந்தித்தோம்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

பிறகு அடிக்கடி, பார்ட்டிகளில் சந்தித்துகொண்டோம். நட்பானோம். அந்த நேரத்தில் சுஷாந்த் வேறொருவரை காதலித்து வந்தார். பின்னர் நாங்கள் பணிபுரிந்த தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ஒன்றாக வெளியேறிய பின், இருவரும் காதலிக்கத் தொடங்கினோம். சுஷாந்துக்கு மன அழுத்தப் பிரச்னை இருந்தது. அவர் அதை வெளியில் சொல்லவில்லை.

கதறி அழுவார்

கதறி அழுவார்

இதற்காக அவர் சிகிச்சைப் பெற்று வந்தார். அவர் அடிக்கடி தன்னை தனிமைப்படுத்திக் கொள்வார். பலமுறை அப்படி செய்திருக்கிறார். சில வேளை, கதவை பூட்டிக் கொண்டு பல மணிநேரமாக கதறி அழுவார். திடீரென்று புனேவில் இருக்கும் பண்ணை வீட்டுக்குப் போய் தனியாக இருப்பார். மருந்து மாத்திரைகளை சரியாக எடுத்துகொண்டிருந்தார்.

மாத்திரைகள்

மாத்திரைகள்

ஆனால், கடந்த சில நாட்களாக அவர் மாத்திரைகள் எடுப்பதை விட்டுவிட்டார். இதற்கிடையே ஒரு நாள் தனக்கு கொஞ்சம் தனிமை வேண்டும் என்று என்னிடம் சொன்னார். தனியாக இருக்க விரும்புகிறேன் என்றார். இதனால், அவர் சொன்னதற்கு மதிப்பளித்து, கடந்த 6 ஆம் தேதி அவரது பாந்த்ரா வீட்டில் இருந்து வெளியேறி விட்டேன்.

குணமாகிவிடுவார்

குணமாகிவிடுவார்

எல்லாம் சரியாகி மன அழுத்தத்தில் இருந்து அவர் குணமாகிவிடுவார் என்று நினைத்தேன். ஆனால், கடந்த 14 ஆம் தேதி திடீரென தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. இவ்வாறு ரியா சக்கரவர்த்தி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் மேலும் சிலரிடம் போலீசார் விசாரணை நடத்த இருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X