சுஷாந்தை அதைச் சொல்லி மிரட்டினார் காதலி ரியா.. தந்தை பகீர் புகார்..மும்பை விரைந்தது பாட்னா போலீஸ்!

By

பாட்னா: நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் அவர் தந்தை, காதலி ரியா சக்கரவர்த்தி மீது பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார்.

Recommended Video

Sushan Singh வழக்கில் Mahesh Bhatt யை விசாரித்த Bandra Police

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த மாதம் 14 ஆம் தேதி, தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் கை போ சே என்ற இந்தி படம் மூலம் நடிகராக அறிமுகமானவர்.

தில் பெச்சாரா

தில் பெச்சாரா

கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக்கில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். இவர் நடித்த கடைசி படமான, தில் பெச்சாரா படம் கடந்த 24 ஆம் தேதி ஒடிடி-யில் வெளியாகி உள்ளது. நடிகர் சுஷாந்த் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. சுஷாந்த் சிங் பயன்படுத்திய மருந்து, மாத்திரைகள் மற்றும் மருந்துசீட்டுகளை அவர் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றினர்.

ரியா சக்கரவர்த்தி

ரியா சக்கரவர்த்தி

அது மன அழுத்தத்துக்காக அவர் பயன்படுத்திய மருந்துகள்தான் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இருந்தும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. சுஷாந்தின் நண்பர்கள், தோழிகள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், இயக்குனர்கள் என சுமார் 38 பேரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலி என்று கூறப்படும் நடிகை ரியா சக்கரவர்த்தியிடமும் போலீசார் விசாரித்தனர்.

தனிமைப்படுத்தி

தனிமைப்படுத்தி

அவரிடம் பல மணி நேரம் நடந்த விசாரணையில், அவர் பல்வேறு தகவல்களை முக்கியத் தகவல்களைத் தெரிவித்தார்.'சுஷாந்துக்கு மன அழுத்தப் பிரச்னை இருந்தது. அவர் அதை வெளியில் சொன்னதே இல்லை. இதற்காக அவர் சிகிச்சைப் பெற்று வந்தார். அவர் அடிக்கடி தன்னை தனிமைப்படுத்திக் கொள்வார். பலமுறை அப்படி செய்திருக்கிறார். சில வேளை, கதவை பூட்டிக் கொண்டு பல மணிநேரமாக கதறி அழுவார்' என்று போலீசாரிடம் தெரிவித்திருந்தார்.

பைத்தியமாக நிரூபித்து

பைத்தியமாக நிரூபித்து

இந்நிலையில் மறைந்த சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங் பாட்னா ராஜீவ் நகர் போலீஸ் ஸ்டேஷனில் ரியா மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சுஷாந்தை நடிகை ரியா சக்கரவர்த்தி மிரட்டி வந்துள்ளார். மன அழுத்தத்துக்காக சுஷாந்த் பயன்படுத்திய மாத்திரைகள், மருந்து சீட்டுகளை மீடியாவுக்கு தெரியபடுத்தி விடுவேன் என்றும் அதன் மூலம் பைத்தியமாக நிரூபித்து விடுவதாகவும் அவர் மிரட்டியுள்ளார்.

திஷா தற்கொலை

திஷா தற்கொலை

இதை தனது சகோதரியிடம் தெரிவித்துள்ளார் சுஷாந்த். இந்த விஷயம் வெளியே தெரிந்தால் தன்னை யாரும் நடிக்க அழைக்கமாட்டார்கள் என்றும் சுஷாந்த் சகோதரியிடம் கூறியுள்ளார். இதற்கிடையே ஜூன் மாதம் 8 ஆம் தேதி, சுஷாந்தின் மானேஜர் திஷா தற்கொலை செய்துகொண்டார். அவரை சுஷாந்துக்கு மானேஜராக நியமித்தது, நடிகை ரியாதான். திஷாவின் தற்கொலைக்கு சுஷாந்த் தான் காரணம் என சொல்லி விடுவதாகவும் அச்சுறுத்தியுள்ளார் ரியா.

கோடிக்கணக்கான ரூபாய்

கோடிக்கணக்கான ரூபாய்

இதனால் பயந்து போன சுஷாந்த் மன அழுத்தம் அதிகமாகி தற்கொலை செய்துள்ளார். இதற்கு நடிகை ரியாவும் அவர் குடும்பத்தினரும் காரணம். சுஷாந்த் சிங்கின் வங்கி கணக்குகளை ரியாதான் கையாண்டு வந்ததாகவும் கோடிக்கணக்கான ரூபாய் அவர் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுஷாந்தின் தந்தை தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரியா, அவரது குடும்பத்தினர் மீது எப்.ஐ.ஆர் சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்த மும்பைக்கு போலீஸ் டீமை அனுப்பி உள்ளது. இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X