twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரியா சக்ரபர்த்தியை கைது செய்ய வேண்டும்.. விரைவில் நடக்கும் என நம்புகிறேன்: சுஷாந்த் குடும்ப வக்கீல்!

    |

    சென்னை: ரியா சக்ரபர்த்தியை கைது செய்ய வேண்டும் என்றும் விரைவில் அது நடக்கும் என நம்புவதாகவும் சுஷாந்தின் குடும்ப வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

    நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14ஆம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பாலிவுட் சினிமாவில் உள்ள நெபோட்டிசம் மற்றும் வாரிசு அரசியலே அவரது தற்கொலைக்கு காரணம் என கூறப்பட்டது. அவரது மரணம் தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாங்க அமிதாப் மாமா.. ட்விட்டரில் இணைந்த இளவரசு.. மீம் போட்டு வரவேற்ற ரசிகர்கள்!வாங்க அமிதாப் மாமா.. ட்விட்டரில் இணைந்த இளவரசு.. மீம் போட்டு வரவேற்ற ரசிகர்கள்!

    ரியா மீது புகார்

    ரியா மீது புகார்

    இந்நிலையில் சுஷாந்தின் தந்தை, அவரது காதலியான ரியா சக்ரபர்த்தி மீது சரமாரியாக குற்றம்சாட்டி போலீஸில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து அவர் மீது எஃப்ஐஆர் செய்யப்பட்டுள்ளது. அதில் சுஷாந்திடம் இருந்து 15 கோடி பணத்தை ரியா பெற்றுள்ளார் என்றும் சுஷாந்துக்கு பொருளாதார நெருக்கடி கொடுத்து மன அழுத்தத்தில் தள்ளினார் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

    போலீஸ் மீது நம்பிக்கையில்லை

    போலீஸ் மீது நம்பிக்கையில்லை

    இந்நிலையில் சுஷாந்த் குடும்பத்தினரின் வழக்கறிஞரான, விகாஸ் சிங் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் 'சுஷாந்தின் குடும்பத்திற்கு மும்பை காவல்துறை மீது நம்பிக்கை இல்லை, ஏனெனில் அவர்கள் விசாரணை நடத்தி வரும் விதம் அப்படி. ஒட்டு மொத்த காவல்துறையையும் குற்றம் சாட்ட வேண்டும் என்று நான் இதை கூறவில்லை.

    குடும்பத்திற்கு அழுத்தம்

    குடும்பத்திற்கு அழுத்தம்

    சுஷாந்தின் மரணத்திற்கு 5-6 தயாரிப்பு நிறுவனங்கள் தான் பொறுப்பு என பெயர்களை கூற சொல்லி குடும்பத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அவரது மரணத்திற்கு குடும்பத்தினர் ஏன் ஏதோ ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை சொல்ல வேண்டும்? இது உண்மையில் அவரின் குடும்பத்தை மிகவும் தொந்தரவு செய்யும் ஒன்று.

    அவர்கள் உணர்ந்தார்கள்

    அவர்கள் உணர்ந்தார்கள்

    சரியான முடிவை கொடுப்பதற்கான ஒரே வழி இந்த விஷயத்தை அதன் தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்வதே என்று அவர்கள் உணர்ந்தார்கள். அதனால்தான் இந்த விஷயத்தை பாட்னாவில் பதிவு செய்துள்ளோம் என்றார்.

    மரணத்திற்கு நீதி வேண்டும்

    மரணத்திற்கு நீதி வேண்டும்

    மேலும் சுஷாந்தின் குடும்பத்திற்கு அழுத்தம் கொடுப்பது யார் என்ற கேள்விக்கு பதிலளித்த வழக்கறிஞர் விகாஸ் சிங், யாருடைய பெயரையும் நான் சொல்வது சரியானதாக இருக்காது. சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு மட்டுமே நாங்கள் நீதி கேட்பதால் இந்த விவரத்தை இனி எடுக்க வேண்டாம் என்று குடும்பத்தினருக்கும் அறிவுறுத்துவேன். மும்பை காவல்துறையின் எந்தவொரு அதிகாரிக்கும் எதிரான சூனியத்திற்கு நாங்கள் செல்ல விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.

    முறையாக விசாரிக்க வேண்டும்

    முறையாக விசாரிக்க வேண்டும்

    மேலும் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நபர் கைது செய்யப்பட வேண்டும் என்பதால் நானும் சுஷாந்த் குடும்பத்தினரும் அமைதியாக உள்ளோம். சுஷாந்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், இந்த விவகாரம் சரியான முறையில் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவரது குடும்பம் விரும்புகிறது.

    ஃபிரியாக சுற்றுகிறார்

    ஃபிரியாக சுற்றுகிறார்

    கைது முதலில் நடக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்ததால் ஊடகங்களுடன் பேச விரும்பவில்லை. எனவே, இதுவரை கைது செய்யப்படாததால் மகிழ்ச்சி இல்லை. ஒருவர் இறந்த விஷயத்தில் குற்றம்சாட்டப்பட்டவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்தும் அவர் இன்னும் கைது செய்யப்படமால் ஃபிரியாக சுற்றி வருகிறார்.

    நடக்கும் என நம்புகிறேன்

    நடக்கும் என நம்புகிறேன்

    எனவே, அது வேகமாக நடக்கும் என்று நம்புகிறேன், ஏனென்றால் அதன் பின்னரே இந்த விஷயத்தை அதன் தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்ல முடியும். இவ்வாறு சுஷாந்த் சிங் குடும்பத்தினரின் வழக்கறிஞரான விகாஸ் சிங் தெரிவித்துள்ளார்.

    English summary
    Rhea Chakraborty to be arrested says Sushanth Singh Rajput family lawyer. He also hopes it will happen soon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X